அறிவியல் ஆயிரம்: ஸ்டென்ட் மூலம் புற்றுநோய் சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு

ஸ்டென்ட் மூலம் நேரடியாக புற்றுநோய் கட்டியின் மீது மருந்து செலுத்தும் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இதயத்தில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதனை நீக்க அல்லது சரி செய்ய ஸ்டென்ட் வைக்கின்றனர். அதுபோலவே புற்றுநோய் சிகிச்சைக்கும் ஸ்டென்ட் வைக்கும் நிலைமைக்கு முன்னேறிவிட்டது நவீன மருத்துவ உலகம்.

உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட முறையில், மருந்தினை அந்த ஸ்டென்ட் மூலம் வழங்கும் உணவுக்குழாய் ஸ்டென்டை தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் (யூனிசா) மற்றும் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் (Flinders University) ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பாலியூரிதீன் இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 3டி அச்சிடப்பட்ட ஸ்டென்டில் கீமோதெரபி/வேதி சிகிச்சையில், 5-ஃப்ளூரூராசில்(5-flourouracil) போன்ற செயல்பாடுள்ள மருந்துப் பொருள்கள் உள்ளன. இந்த 5-ஃப்ளூரூராசில் மருந்தை உணவுக்குழாயில் அதிலுள்ள புற்றுநோய்க்கட்டியின் மீது நேரடியாக வைக்கலாம். உணவுக்குழாய் என்பது வாய் மற்றும் வயிற்றோடு இணைக்கும் பகுதியாகும்.

இதன் பொருள் என்னவென்றால், ஸ்டென்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை நேரடியாக 110 நாட்களுக்கு புற்றுநோயின் களத்திலேயே வழங்கும். மேலும், புற்றுநோய்க் கட்டிகளை மேற்கொண்டு வளரவிடாமல் தடுக்கிறது.

'உணவுப்பாதை/உணவுக்குழாய் புற்றுநோயானது சிகிச்சையளிப்பதற்கு சவாலும் சிக்கலும் நிறைந்ததாகும். பெரும்பாலும் சவாலானது, ஆனாலும் ஆரம்பகால நோயறிதல் என்பது  நேர்மறையான விளைவுகளுக்கும் உயிரை கொஞ்சம் அதிக நாள் தக்கவைக்கவும் மிகவும்  முக்கியமானதாகும்' என்று யுனிசாவின்(UniSA) பாரிஸ் ஃ பௌலாடியன் கூறுகிறார்.

இந்த புற்றுநோயில் எந்த ஒரு உணவுப்பொருளும், உணவுக்குழாயை உணவு/நீர் போன்றவற்றை விழுங்க உணவுக்குழாய் அனுமதிக்காது. காரணம் அங்குள்ள வீரியம் மிக்க புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் டிஸ்ஃபேஜியா(உணவு அல்லது பானத்தை விழுங்குவதில் சிரமம்) என்பது முக்கியமான அறிகுறியாகும். ஆனால், இவையும் புற்றுநோய் செல்களை ஆக்கிரமிப்பதன் மூலம் தடைபடும்.

யுனிசாவின் பாரிஸ் பௌலாடியன் கூறுகையில், 'உணவுக்குழாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது சிக்கலானது; பெரும்பாலும் சவாலானது, ஆரம்பகால நோயறிதல் நேர்மறையான விளைவுகளுக்கு முக்கியமானதாகும். உணவுக்குழாயைத் தடுக்கும் வீரியம் மிக்க புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் டிஸ்ஃபேஜியா (உணவு அல்லது பானத்தை விழுங்குவதில் சிரமம்) மிக முக்கியமான அறிகுறியாகும்.

பொதுவாக உணவுக்குழாயில் வைக்கப்படும் ஸ்டென்டால் அடைப்புகள் எளிதாக உடைக்கப்படுகின்றன. உணவுக்குழாயை எப்போதும் திறந்து வைக்க என்று அதன் அருகிலேயே ஒரு சிறிய குழாயும் உணவுக்குழாயில் திறந்து வைக்கப்படுகிறது. ஆனால், இவையும் கூட புற்றுநோய் செல்களின் ஊடுருவும்  ஆக்கிரமிப்பால் தடை செய்யப்படலாம்.

எங்கள் புதிய மருந்து ஏற்றப்பட்ட உணவுக்குழாய் ஸ்டென்டுகள் புற்றுநோய்க்கு எதிர்ப்பு மருந்துகளை நேரடியாக புற்றுநோய்க் கட்டிக்கு வழங்குவதன் மூலம் மேலும் தடைகளைத் தடுக்க உதவும், மேலும் டிஸ்ஃபேஜியாவின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யும்போது மேலும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

2020 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 1,587 பேருக்கு  உணவுக்குழாய் புற்றுநோய் கண்டறியப்பட்டது; இது உலகின் பொதுவான ஏழாவது வகை புற்றுநோயாகும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையின்றி, ஐந்தாண்டு உயிர்வாழும் வீதம் சுமார் 20% மட்டுமே.

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இணைக்கும் 3டி அச்சிடும் செயல்முறைகள், நாங்கள் மருந்துகளை வழங்கும் முறையை மாற்றுவதற்கான வேகத்தில் உள்ளன என்று யுனிசாவின் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் இயக்குனர் சஞ்சய் கார்க் கூறுகிறார்.

இதுகுறித்து மேம்பாட்டுக் குழு கூறியதாவது, 'துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருந்து விநியோக முறைகளை வடிவமைக்க 3டி அச்சிடும் திறனை நாங்கள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். புதிய மருந்து ஏற்றப்பட்ட 3டி அச்சிடப்பட்ட ஸ்டென்டுகளை மேலும், சோதிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், இந்த புதிய தொழில்நுட்பம் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான விளைவுகளை வழங்கும்' என்று கூறியுள்ளது. இந்த புதிய ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் 'பயோ மெட்டீரியல் சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com