அறிவியல் ஆயிரம்: மனித குடல் பாக்டீரியாவும் மரபணுக்களும்

நம்முடைய மரபணுக்களுக்கும் குடலில் குடியிருக்கும் பாக்டீரியாவுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
அறிவியல் ஆயிரம்: மனித குடல் பாக்டீரியாவும் மரபணுக்களும்

நம்முடைய மரபணுக்களுக்கும் குடலில் குடியிருக்கும் பாக்டீரியாவுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து நோட்ரே டேம் பல்கலைக்கழக (University of Notre Dame) ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பபூனின் குடல் பாக்டீரியா ஆய்வு

கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவில் வாழும் பபூன் குரங்குகளின் குடல் பாக்டீரியா, கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து சேகரிக்கப்பட்டு 16,000க்கும் மேற்பட்ட குடல் நுண்ணுயிரிகளில் நீண்ட காலமாக ஆய்வு செய்யப்பட்டது.  குடல் நுண்ணுயிரி விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து அறிந்த பிறகு, அவைகளிலுள்ள பெரும்பாலான பாக்டீரியா பரம்பரை பரம்பரையாக வந்தவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பபூன்களில் பரம்பரை பரம்பரையாக இருக்கும் பல நுண்ணுயிர் பண்புகளும் மனிதர்களிடையே பரம்பரையாக இருப்பவைதான்  என்பதையும் இந்தக்குழு கண்டறிந்துள்ளது.

மாற்றத்துக்குள்ளான பாக்டீரியா

நமது குடல் நுண்ணுயிரிகள் என்பவை - நமது குடலில் வாழும் பாக்டீரியா எப்போதும் மாறிகொண்டே வரும் மழைக்காடுகளிலிருந்து மாறி வந்தவையே. இவை  முதன்மையாக நமது வாழ்க்கை முறையால் அதாவது நாம் உண்ணும் உணவு, மருந்துகள் போன்ற சுற்றுச்சூழலால் குடலில் உள்ள  நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆனால், நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆய்வுகள் நாம் முன்பு அறிந்ததைவிட மிக அதிகமான மரபணு கூறுகள் பற்றிய தகவல்களக் கண்டறிந்துள்ளன.

குடல் நுண்ணுயிரிகள்-  பபூன் & மனிதன்

ஆனாலும் கூட இந்த பரம்பரை விஷயங்கள் காலப்போக்கில், பருவகாலம் மற்றும் வயதுக்கு ஏற்ப மாறுகிறது. பபூன்களில் பரம்பரையாக இருக்கும் பல நுண்ணுயிர் பண்புகளும் மனிதர்களிடையே இருக்கும்/வாழும்  பரம்பரை நுண்ணுயிரிகளாகவே உள்ளன என்பதையும் இக்குழு கண்டறிந்துள்ளது.

நுண்ணுயிரிகளை வடிவமைக்கும் சூழல்

"நம்  மரபணுக்களை விட நுண்ணுயிரியை வடிவமைப்பதில் சூழல் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்றால் மிகையல்ல. இதுதான் உண்மை. ஆனால் இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்றால், மரபணுக்கள் நுண்ணுயிரியத்தில் மிகக் குறைந்த பங்கை வகிக்கின்றன என்ற எண்ணத்திலிருந்து நம்மை விலக்கி, மரபணுக்கள் பரவலாக, சிறியதாக இருந்தாலும் ஊடுருவி செயல்படுகின்றன என்று  உயிரியல் அறிவியல் துறைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான எலிசபெத் ஆர்ச்சி கூறுகிறார். 

குடல் நுண்ணுயிரிகளின் பன்முகப் பணிகள்

குடல் நுண்ணுயிரிகள் பல வேலைகளைச் செய்கின்றன. இவை  உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமின்றி அத்தியாவசிய வைட்டமின்களையும் உருவாக்குகிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்க உதவுகிறது. இந்த புதிய ஆராய்ச்சி முதன்முதலில் பரம்பரைத்தன்மையுடன் ஒரு உறுதியான தொடர்பைக் காட்டுகிறது.

ஆய்வுகள்

மனிதர்களின் குடலில் உள்ள நுண்ணுயிரிகளைப் பற்றி முந்தைய ஆய்வுகளும் உள்ளன. ஆனால், அவற்றில் முந்தைய ஆய்வுகளில், 5% -13 % மட்டுமே பரம்பரை என்று தெரிந்தது. ஆனால் ஆர்ச்சியும்(Archie) ஆராய்ச்சிக் குழுவும் குடல் நுண்ணுயிரியைப் பற்றி அறிவதற்காக/படிப்பதற்கான 'ஸ்னாப்ஷாட்' அணுகுமுறையில் பார்த்ததனர். இதன்விளைவாக, அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவே  கருதப்படுகின்றன. அனைத்து முந்தைய ஆய்வுகளும் ஒரே ஒரு புள்ளியில் மட்டுமே நுண்ணுயிரிகளை மட்டுமே அளவிடுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. 

மனிதன் & பபூன் மரபணுக்கள்

புள்ளிவிவரங்கள் ஆய்வுக்கு ஆய்வு வேறுபடுகின்றன. இருப்பினும், தற்போது சிம்பன்சிகள் (பான் ட்ரோக்ளோடைட்டுகள்)மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான போனொபோஸ் (பான் பானிஸ்கஸ்) இருவரும் மனிதர்களின் நெருங்கிய வாழும் உறவினர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு இனமும் நமது டி.என்.ஏவில் 98.7% பகிர்ந்துகொள்கின்றன. பல வழிகளில், நம் குடல் பாக்டீரியா பால்வீதியைப் போல பரந்த மற்றும் மர்மமானவை. நல்ல மற்றும் கெட்ட சுமார் 100 டிரில்லியன் பாக்டீரியா நம் செரிமான அமைப்பினுள் வாழ்கின்றன. கூட்டாக, அவை குடல் மைக்ரோபயோட்டா என்று அழைக்கப்படுகின்றன. இதய நோய்கள் முதல் கீல்வாதம் வரை புற்றுநோய் வரை இந்த அபரிமிதமான உயிரினங்களின் அமைப்பு இவ்வாறு பாதிக்கிறது. ஆனால் குடல் மைக்ரோபயோட்டா எவ்வாறு செயல்படுகிறது, நீங்கள் எவ்வாறு பயனடையலாம் என்பது அச்சுறுத்தலாகவும்கூட இருக்கும்.

மனிதர்களும் பபூன்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள். அம்போசெலி பபூன் ஆராய்ச்சி திட்டத்தின்படி, அவை 94 % மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

கொரில்லாக்களும் மனிதர்களும்

கொரில்லாக்கள், ஒராங்குட்டான்கள், சிம்பன்சிகள் மற்றும் போனொபோஸ் ஆகியவை “பெரிய குரங்குகள்” எனப்படும். விலங்குகளின் குடும்பத்துடன் மனிதர்கள் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர்கள். இவற்றில், போனொபோஸ் மற்றும் சிம்பன்ஸிகள் நமக்கு மிக நெருக்கமானவை, ஏனென்றால் அவை நமது டிஎன்ஏவை மிக நம்பிக்கையுடன் பகிர்கின்றன என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் இவை நமது டிஎன்ஏவை கிட்டத்தட்ட 99% பகிர்ந்துகொள்கின்றன. இந்த காரணத்திற்காக, விஞ்ஞானிகள் பெரும்பாலும் மனிதர்களின் உயிரியல் வழிமுறைகள் யுகங்களாக எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது பற்றி மேலும் அறிய விரும்பும் போது இந்த விலங்கினங்களை நோக்கித் திரும்புகிறார்கள்.

பபூனின் மலம் சோதிப்பு

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள், 585 காட்டு அம்போசெலி பபூன்களிலிருந்து மலத்தின் மாதிரிகளைப் பயன்படுத்தினர். பொதுவாக ஒரு விலங்கிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டன. மாதிரிகளிலிருந்து நுண்ணுயிரிகளைப் பற்றிய விவரங்கள் தெளிவாகவே அறியப்பட்டன. இவை ஈரமான மற்றும் வறண்ட பருவங்களுக்கு இடையில் பபூன்கள் உண்ணும் உணவுகளில் உள்ள மாறுபாடுகளைக் காட்டின. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு விலங்கு பற்றிய விரிவான தகவல்கள், அறியப்பட்ட சந்ததியினர், சுற்றுச்சூழல் நிலைமைகள், சமூக பழக்கவழக்கங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் சேகரிக்கும் நேரத்தில் குழு அளவிலான உணவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள் அடங்கும்.

பன்முகத் தன்மை கொண்ட நுண்ணுயிரிகள்

இவைகளின் ஒட்டுமொத்த பன்முகத்தன்மை மற்றும் தனிப்பட்ட நுண்ணுயிரிகளின் ஏராளமான தன்மை உள்ளிட்ட 97%  நுண்ணுயிர் பண்புகள் கணிசமாக பரம்பரைதான் என்று ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. இருப்பினும், மரபுரிமையின் சதவீதம் மிகக் குறைவாகவே தோன்றுகிறது. 5 சதவிகிதம் மட்டுமே - மாதிரிகள் மனிதர்களில் செய்யப்படுவது போல, ஒரே ஒரு புள்ளியில் இருந்து மட்டுமே சோதிக்கப்படும்போது காலப்போக்கில் ஒரே விலங்கிலிருந்து மாதிரிகளைச சேகரித்துப் படிப்பதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

இன்னும் தேவை அதிக ஆய்வு

"மனிதனுக்கு இதனைச் செய்யும்போது இவை இப்பணியில் பரம்பரைத்தன்மை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில் இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. மலம் உறைவிப்பானில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தொடர் பத்தாண்டுகள் அவர்களிடம் அனைத்து துவக்க கால தனிப்பட்ட ஹோஸ்ட்களும்(hosts) இல்லை. எனவே இதைப்பற்றி இன்னும் ஆழமாகவே அறிய வேண்டும் என்று ஆர்ச்சி கூறினார்.

சூழல் காரணிகளின் தாக்கம் நுண்ணுயிரிகளில்

சுற்றுச்சூழல் காரணிகள் குடல் நுண்ணுயிரியிலுள்ள பண்பு மரபுரிமையை பாதிக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை குழு கண்டறிந்தது. ஈரப்பதத்தை விட வறண்ட காலங்களில் நுண்ணுயிர் பரம்பரை பொதுவாக 48 சதவீதம் அதிகமாக இருந்தது. இது மழைக்காலத்தில் பபூன்களின் மிகவும் மாறுபட்ட உணவால் விளக்கப்படலாம். ஆய்வின்படி, வயதைக் காட்டிலும் பரம்பரையின் பண்பு அதிகரித்தது.

பபூன்களில் குடல் நுண்ணுயிரிகளில் சுற்றுச்சூழலின் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஆராய்ச்சி காட்டியதால், அவர்களின் கண்டுபிடிப்புகள் முந்தைய ஆய்வுகளுடன் உடன்பட்டன. குடல் நுண்ணுயிரியத்தின் மாறுபாட்டின் மீதான சுற்றுச்சூழல் விளைவுகள் சேர்க்கை மரபணு விளைவுகளைவிட பெரிய பங்கை வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. மரபணுக் கூறுகளை அவர்கள் கண்டுபிடித்ததோடு இணைந்து, சுற்றுச்சூழல் காரணிகளைப் பற்றிய அதன் புரிதலையும்  செம்மைப்படுத்த குழு திட்டமிட்டுள்ளது.

எதிர்கால சிகிச்சை முறையை மாற்றும் நுண்ணுயிரிகள்

ஆனால் குடல் நுண்ணுயிரியிலுள்ள மரபணுக்கள் பரம்பரை என்பதை அறிந்துகொள்வது, எதிர்காலத்தில் மரபியலால் வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகளை அடையாளம் காண்பதற்கான புதிய அறிவியல் கதவைத் திறந்துள்ளது. எதிர்காலத்தில், அவர்களின் குடல் நுண்ணுயிரியின் மரபணுவை வெட்டி ஒட்டுவதன் மூலம் அல்லது அதன் அடிப்படையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளும்கூட  வடிவமைக்கப்படலாம்.

1971 லிருந்து 2௦21 வரை பபூன்& விலங்குகள் கண்காணிப்பு

1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்போசெலி பபூன் திட்டம், உலகின் காட்டு விலங்குகளின் நீண்டகால ஆய்வுகளில் ஒன்றாகும். புல்தரை வாழ் பபூனில் கவனம் செலுத்திய இத்திட்டம் கிளிமஞ்சாரோ மலையின் வடக்கே கிழக்கு ஆபிரிக்காவின் அம்போசெலி சுற்றுச்சூழல் அமைப்பில் அமைந்துள்ளது. ஆராய்ச்சி குழுக்கள் பல சமூக குழுக்களில் நூற்றுக்கணக்கான பபூன்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் கண்காணித்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் தற்போது சுமார் 300 விலங்குகளை கண்காணிக்கின்றனர். ஆனால் 1,500க்கும் மேற்பட்ட விலங்குகளின் வாழ்க்கை வரலாற்று தகவல்களை குவித்துள்ளனர். இவைகளின் மரபணு மற்றும் சூழலியல் இதற்கான உறவுத் தொடர்புகளைப் பற்றிய கண்டுபிடிப்புகள் அதன் செயல்பாடுகளை ஒட்டி உள்ளன. இவை அனைத்தும் சுற்றுச்சூழல், விலங்குகள் மற்றும் மனித குலத்துக்கு இடையில் இணைப்பானாக புதிய புதிய பாதைகளை வகுத்துக் கொடுக்கும் அறிவியல் தளம் என நம்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com