புற்றுநோயில் புதிய ஆய்வு: போர்வாளாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம்!

அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். 
புற்றுநோயில் புதிய ஆய்வு: போர்வாளாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம்!

அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றிய தகவலை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications)என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதில் புதிய புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பு செல்கள் என்பவை நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிராக போராட அனுமதிப்பது மற்றும் அவை உடல் ரீதியான தடைகளை சமாளிக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தக்கூடும். அவர்களைக் காப்பாற்றும்.

இன்றைய நிலையில் புற்றுநோய்

2020ல் ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் மரணித்துப் போகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.93 கோடி புற்றுநோயாளிகள் உருவாகின்றனர்.

உலகெங்கும் உள்ள நாடுகளில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR - Indian Council of Medical Research) கூறியுள்ளது.

ஆம், இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது.

இப்போது கண்டுபிடித்துள்ள புதிய ஆராய்ச்சி புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

புற்றுநோய் ஆய்வுத் தன்மை

மினசோட்டா இரட்டை நகரங்களின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஓர் அற்புதமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் செறிவூட்டி உருவாக்கப்பட்ட நோயெதிர்ப்பு செல்கள் எவ்வாறு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது என்பதுதான். நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிராகத் திருப்பி, அவைகளுக்கு வலுவூட்டி செயல்பட வைப்பது. இது எதிர்காலத்தில் சிறந்த சிகிச்சை முறையாக மாறலாம். மனித உயிர்களின் உயிர்காப்பானாகவும் இருக்கலாம்.

புற்றுநோய் சிகிச்சை ரசாயனம் மற்றும் கதிர்வீச்சு

இப்போது  ரசாயனப் பொருட்கள் அல்லது கதிர்வீச்சைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு வகை சிகிச்சை. இது நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் இப்போது நடத்தப்படும்  இந்த ஆய்வில், ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் ஒரு வகை செல்லான  டி-செல்களைப்  பயன்படுத்தி புற்றுநோயை எதிர்கொள்ளச் செய்வது ஆகும்.

டி செல்கள்

வெள்ளையணுக்களின் டி(T) செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உடலின் தற்காப்பு சக்தி/நோயெதிர்ப்பு உடலின் சைட்டோடாக்ஸிக் டி செல்கள் (Cytotoxic T cells) என்பவை  இலக்கு நோக்கி படையெடுக்கும். செல்களைத் தேடி அழிக்கும் வீரர்களைப் போன்றவை. ரத்தத்தில் அல்லது ரத்தத்தை உருவாக்கும் உறுப்புகளில் சில வகையான புற்றுநோய்களுக்கு நோயெதிர்ப்பு சிகிச்சையைப் பயன்படுத்துவதில் வெற்றி கிடைத்தாலும்கூட, திடமான புற்றுக்கட்டிகளில் ஒரு டி செல்களின் பணி மிகவும் கடினம். கட்டி ஒரு தடையாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களை அடைய டி செல்களின் செயல்பாடு கடினமாக உள்ளது  என்று ஆய்வின் மூத்த எழுத்தாளரும் மினசோட்டா பல்கலைக்கழக கல்லூரி பயோமெடிக்கல் இன்ஜினியரிங், அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியின் இணை பேராசிரியருமான பாவ்லோ புரோவென்சானோ கூறுகிறார்.

நோயெதிர்ப்பு செல்களை  மேம்படுத்துதல்

இந்த டி செல்கள் புற்றுக் கட்டிகளுக்குள் நுழைகின்றன, ஆனால் அவை இயல்பாக  வேகமாக  நகர்ந்து செயல்படமுடியாது. செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது. ஆனால் இதில் இந்த முதல்-வகையான ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் டி செல்களை மேம்படுத்திய செயல்பாடுடைய செல்களாக மாற்றி அமைத்து உருவாக்கி  செயல்பட வைப்பது. இதில் செல்களை எந்திர மயமாக்கப்பட்ட அதிகம் செயல்பாடுள்ள செல்களாக  உகந்ததாக்குவதற்கும் அல்லது தடைகளை சமாளிக்க அவற்றை மேலும் பொருத்தமாக மாற்றுவதற்கும் வடிவமைப்பு அளவுகோல்களை உருவாக்குகிறார்கள். இந்த நோயெதிர்ப்பு செல்கள் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு, முடிந்தால் அவை புற்றுநோய்க் கட்டியை அழிக்கக்கூடும்.

புற்றுநோயைத் தாக்கும் போராளிகளாக டி செல்கள்

ஒரு நாராக/தசைகளாக உள்ள புற்றுநோய்க்கட்டியில் கட்டியின் விறைப்பு என்பது அதிகமானது. எனவே அவை நோயெதிர்ப்பு செல்கள் இரண்டு மடங்கு மெதுவாக செல்ல வைக்கிறது. கிட்டத்தட்ட அவை புதைமணலில் இயங்குவதைப்போல ஆகிவிடுகின்றன.

இதுதொடர்பாக ஆய்வாளர்கள் கூறுவது: இந்த ஆய்வு எங்கள் முதல் வெளியீடாகும், அங்கு சில கட்டமைப்பு மற்றும் சமிக்ஞை கூறுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அங்கு இந்த டி செல்களை மிகவும் பயனுள்ள புற்றுநோய் போராளிகளாக மாற்றுவோம் என்று மினசோட்டா பல்கலைக்கழக மேசோனிக் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர் புரோவென்சானோ கூறினார்.

ஒரு புற்றுநோய்க் கட்டிக்குள் உள்ள ஒவ்வொரு 'தடையின் போக்கும்' சற்று வித்தியாசமானது. ஆனால் சில ஒற்றுமைகள் உள்ளன. இந்த நோயெதிர்ப்பு உயிரணுக்களை மாற்றி  உருவமைத்த பின்னர், அவை எந்த விதமான தடைகள் இருந்தாலும் அவை புற்றுநோய்க் கட்டியின் வழியாக கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக நகர்ந்ததைக் கண்டோம் என்கிறார். 

மாற்றியமைக்கப்படும் டி செல்கள்

செல்களைக் கொல்லும் (சைட்டோ டாக்சிக் Cytotoxic)டி செல்களை மாற்றி அமைக்க இதன் ஆய்வாளர்கள் டி உயிரணுக்களின் டி.என்.ஏவை மாற்ற மேம்பட்ட மரபணு எடிட்டிங் தொழில்நுட்பங்களை (மரபணு எடிட்டிங்) பயன்படுத்தினர். இதனால் அவை புற்றுநோய்க் கட்டியின் தடைகளை சமாளிக்க முடியும். இதன் இறுதி இலக்கு என்பது புற்றுநோய் செல்களின் நகர்வை மெதுவாக்கி, உருமாற்றி அமைக்கப்பட்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களை விரைவுபடுத்துவதே. இவை பல்வேறு வகையான தடைகளைத் தாண்டி சிறந்த புற்றுநோய்ப் போராளிகளாக இவைகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த செல்கள் ஒன்றாக கலக்கும்போது, ​​நோயெதிர்ப்பு உயிரணுக்களின் குழுக்கள் புற்றுநோய் செல்களை அடைய பல்வேறு வகையான தடைகளை கடக்க வேண்டும். நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கு உயிரணுக்களின் இயக்க  பண்புகளை தொடர்ந்து தெரிந்து செயல்படுவதே இனி அடுத்த செயல்பாடு என்கிறார் புரோவென்சானோ. ஆராய்ச்சியாளர்கள் தற்போது எலி போன்ற பாலூட்டிகளில் மாற்றியமைத்து உருவாக்கிய நோயெதிர்ப்பு உயிரணுக்களை செலுத்தி அதன் செயல்பாடு அறிகின்றனர்.

வருங்காலத்தில் அவை மனிதர்களின் புற்றுநோய்க் கட்டிகளின் மருத்துவ பரிசோதனைகளைத் திட்டமிட்டுள்ளனர். இது இப்போது ஆரம்ப ஆராய்ச்சியாக கணைய புற்றுநோயை மையமாகக் கொண்டுள்ளது. இனி அவை அவர்கள் உருவாக்கும் நுட்பங்கள் பல வகையான புற்றுநோய்களில் பயன்படுத்தப்படலாம் என்றார் புரோவென்சானோ

உடல் செல்களே...போராளி..!

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு செல் பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் புதிய துறையாகும். இது பரவலான புற்றுநோய்களுக்கான பயன்பாடுகளுடன் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறை.

புற்றுநோயை எதிர்த்து நம் சொந்த உடல் செல்கள் எவ்வாறு போராட முடியும் என்பது ஒரு புதிய சகாப்தமே. இந்த புதிய ஆராய்ச்சியை விரிவுபடுத்தி செயல்படும்போது இது எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதில் இம்மியளவும் ஐயமில்லை. புரோவென்சானோவைத் தவிர இதில் ஏராளமான ஆய்வாளர்கள் மற்றும் மனிதவியலின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகின்றன.

இது மருத்துவ உலகில் மற்றுமோர் மைல்கல்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com