அனிமேஷன் விடியோ மூலமாக சக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் சிறுமி

பள்ளிகள் திறப்பு இல்லாததால் அனிமேஷன் முறையில் வீடியோ பதிவு மூலம் விலங்கியல், வேதியியல் பாடங்களை மனப்பாடம் செய்து இணையம் மூலம் மற்ற மாணவர்களுக்கு விளக்கும் 5-ம் வகுப்பு சிறுமி.
சிறுமி இந்திரா அர்ஜுன்.
சிறுமி இந்திரா அர்ஜுன்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் அர்ஜுன் பிரதீப். இவரது மனைவி அபர்ணா. இவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதியின் ஒரே மகள் இந்திரா அர்ஜூன்(9). கல்பாக்கம் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

4 ஆம் வகுப்பு படிக்கும்போது கரோனா விடுமுறையால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புப் போக மற்ற நேரங்களை வீணாக்காமல் விலங்கியல், வேதியியல் பாடங்களை அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி விடியோ பதிவு மூலம் டிவிட்டர், முகநூல், யுடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு மற்ற மாணவர்கள் இதனை கண்டுகளித்து தெரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறார். 

நல்ல சிந்தனை திறன், ஞாபக சக்தியுடன் விளக்கம் கொடுத்து தானும் ஒரு ஆசிரியர் போன்று பாடம் எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக புலி, சிங்கம், யானை, பாம்பு, கரடி, , சிறுத்தை, நரி போன்ற விலங்குகளின் சுபாவம் குறித்தும், அது வாழும் சூழ்நிலை குறித்தும் மனித உடல் உறுப்புகளின் தனித்தனி செயல்பாடுகள் குறித்தும் அருமையாக அனிமேஷன் முறையில் விளக்கி அசத்துகிறார் சிறுமி இந்திரா அர்ஜூன்.

பிறகு அனிமேஷன் கிராபிக்ஸ் தன் விளக்கப் பாடத்தை தனது தந்தை மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை தனது பள்ளி தோழிகளுக்கும் அனுப்பி அது பற்றி அவர்களுக்கும் சிந்தனைத் திறனை தூண்டுகிறார். 

மற்ற மாணவர்களும் நவீன முறையில் கற்றுக் கொள்ள ஊன்று கோலாக விளங்கி வருகிறார்.

சமீபத்தில் சிறுமியின் தந்தை தனது ட்விட்டர் பதிவில், மகளின் பாடத் திட்டம் தொடர்பான அனிமேஷன் வீடியோ பதிவினை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவினை பார்த்து ரசித்த பிரதமர் நரேந்திரமோடி, சிறுமி இந்திராவின் சிந்தனைத் திறன், ஞாபக சக்தியினை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதேபோல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்திலும் இச்சிறுமியின் அனிமேஷன் பாடதிட்ட வீடியோ வெளியாகி பலரும் சிறுமியின் திறமையினை பாராட்டி உள்ளனர்.

பெற்றோருடன் சிறுமி இந்திரா. 
பெற்றோருடன் சிறுமி இந்திரா. 

படிப்பு மட்டும் இல்லாமல் ஓட்டப் பந்தயம், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா என பள்ளியில் நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். பன்முகத் திறமை கொண்ட இச்சிறுமியின் திறமையினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். ஆர்வம் அதிகம் உள்ளதால் சிறுமியின் அனிமேஷன் பாட திட்ட முயற்சிக்கு அவரது பெற்றோர் ஊக்கம் அளித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com