தமிழ் எண்களை எழுதி அசத்தும் 5 வயது சிறுமி

மிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடிய தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதி அசத்தி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம்பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி பா.மகாவர்ஷினி.
தமிழ் எண்களை தொடர்ச்சியாக  எழுதி அசத்தும் சிறுமி  பா. மகாவர்ஷினி.
தமிழ் எண்களை தொடர்ச்சியாக  எழுதி அசத்தும் சிறுமி  பா. மகாவர்ஷினி.

நாகப்பட்டினம்: தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடிய தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதி அசத்தி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி பா.மகாவர்ஷினி.

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தனித் திறனுடன் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி, மேலவீதியைச் சேர்ந்த இரா.ச.பாலமுருகன் குருக்கள் -ஐஸ்வர்யா அபிராமி தம்பதியரின் மகள் பா.மகாவர்ஷினி, தமிழாசிரிசியராக உள்ள தனது தாயிடம் பயிற்சிப் பெற்று குறுகிய காலத்தில் தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதியும், இடையிடையே உள்ள எந்த  எண்ணைக் குறிப்பிட்டாலும் அதையும் எழுதி அசத்துகிறார். சிறுமியின் அசாத்திய திறன் காண்போரை வியக்க வைத்து வருகிறது.

இதுகுறித்து மகாவர்ஷினியின் தாயாரும், தமிழாசிரியையுமான  ஐஸ்வர்யா அபிராமி கூறியது:

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடியதாகும். கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் காணப்படும் கிரந்த எழுத்து முறையான தமிழ் எண்களை எழுதும் முறைகள் தற்போதைய வழக்கில் இல்லை.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகம் வெளியிட்ட அனைத்து நூல்களிலும் பக்கங்களை குறிக்கும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களிலேயே அமைத்திருந்தன.தமிழ்  எண்கள் எழுதும் முறை தற்போதுபெரு வழக்கில் இல்லை. இந்திய- அரேபிய எண்கள் தான்  பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், தமிழார்வலர்கள் சிலர் இப்பொழுதும் தனது வாகனங்களின் பதிவெண்களை தமிழ் எண்களிலேயே எழுதி நம் தமிழ் எண்களின் முக்கியத்துவத்தை வளர்க்கின்றனர். மற்ற மொழிகளில் எல்லாம் அவரவர் தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. நாமும் நம் தாய்மொழியை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களுக்கும்  இவற்றின் முக்கியத்துவத்தை அறியச் செய்து, தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்.

இதனை நோக்கமாகக் எனது மகள் மகா வர்ஷினிக்கு தமிழ் எழுத்துக்களை எழுதும் பயிற்சியளித்து வருகின்றேன். குழந்தை முதல் எனது மகள் தனித்திறனுடன் இருப்பதை எங்களால் உணர முடிந்து. நன்றாகப் பேசுவதும், பாடுவதும் அவளின் கூடுதல் திறமையாக இருந்தது. அதனால், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த நிலையில் இந்தப் பயிற்சியைத் தொடங்கினேன்.

தற்போது 100 எண்கள் வரை எவ்வித தவறும் இல்லாமலும், இடையிடேயே உள்ள எண்களைக் குறிப்பிட்டாலும்அதை எழுதும் திறன் பெற்றுள்ளார். தொடர்ந்து எனது மகளுக்கு  பயிற்சியளிக்கவுள்ளேன். இதைத் தவிர்த்து தேவாரப் பாடல்கள், யோகா, கீபோர்டு வாசித்தல் பயிற்சியும் அளித்து வருகிறேன் என்றார் தனது கணவர் மற்றும் மகள்களுடன் நின்றபடி ஐஸ்வர்யா அபிராமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com