நேபாள தொடரில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் சிறந்த பீல்டருக்கான விருதுடன் சாகுல்ஹமீது.
நேபாள தொடரில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் சிறந்த பீல்டருக்கான விருதுடன் சாகுல்ஹமீது.

இந்திய கிரிக்கெட் அணியில் திருப்பூர் இளைஞர்!

திருப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


திருப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹார புத்தூரைச் சேர்ந்த முகமது ஆதம் - ரஜியா பேகம் தம்பதியினரின் கடைசி மகன் சாகுல் ஹமீது (22), இவரது வலது கையில் குறைபாடு (எல்டி) உள்ளதால் 70 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி, தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில் 2021 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த நிலையில், நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கடந்த ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரையில் நடைபெற்ற 2 தொடர் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணியில் சார்பில் விளையாடியுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் சாகுல்ஹமீது கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த நான் திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் தொழில்நுட்பம் தொடர்பாக ஓராண்டு படிப்பை 2018ல் முடித்தேன். எனக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது வந்தது.

தமிழக அணியில் தேர்வு: கடந்த 2020 ஆம் ஆண்டு தேனியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில், 3 போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்ததன் மூலமாக தமிழக அணியிலும், இந்த ஆட்டதைத் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் செயலாளர் ஆருண் ரசீதும் இந்தப் போட்டியைக் காண வந்திருந்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், இந்தியா - நேபாளம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 டி20 ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தேன். இதில், முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தேன்.இந்தத் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தமிழக அணியில் இருந்து விளையாடிய நாங்கள் 3 பேரும் சிறப்பாக செயல்பட்டோம். இந்தத் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதையும் பெற்றுள்ளேன்.

இதைத் தொடர்ந்து காசியில் உள்ள ஜெய்நாராயண் கல்லூரியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியும், உத்தரப் பிரசேதம் மாற்றுத்திறனாளிகள் அணியும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து 60 ரன்களுடன், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளேன். எனினும் உத்தரபிரதேச அணி 2-1 என்ற கணக்தில் வெற்றி பெற்றது.  

நேபாளத் தொடரில் கோப்பையை வென்ற மாற்றுத் திறனாளிகள் 
கிரிக்கெட் அணி வீரர்கள் சாகுல்ஹமீது உள்ளிட்டோர்

தனியார் நிறுவனம் சார்பில் நிதியுதவி: நேபாள் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபோது தனியார் நிறுவனம் சார்பில் எனக்கு பேட்டும், காலணியும், கிட் பேக்கும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேலும், மங்கல ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி நிதியுதவியதுடன், போக்குவரத்துக்கான உதவிகளையும் வழங்கியுள்ளனர். அதேபோல எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகிகளும் எனக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.  

தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடதுகை தொடக்க ஆட்டக்காரராகவும், இடது கை மிதவேகப்பந்து வீச்சாளராகவும் விளையாடி வருகிறேன். முன்னதாக ஈரோடு ஒரு லீக் கிளப் அணியில் 2021 ஆம் ஆண்டு விளையாடியபோது 25 ஓவர் கொண்ட போட்டியில் 74 பந்துகளில் 101 ரன்களைக் குவித்துள்ளேன். ஆகவே, இனிவரும் லீக் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளேன்.

மாற்றுத்திறன் கிரிக்கெட் வீர்களுக்கும் அரசு வேலையும், ஊதியமும் வழங்க வேண்டும். திருப்பூர் நல்லூரில் உள்ள வேஸ்ட் குடோனில் சூப்பர்வைசராகப் மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகிறேன். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தற்போது வரையில் எந்த சலுகையும் எங்களைப் போல எந்த ஒரு வீரருக்கும் கிடைக்கவில்லை. அதே வேளையில், வெளிநாட்டு தொடர்களுக்குச் செல்லும்போது அரசு சார்பில் டிக்கெட் செலவு, பயணப்படி ஆகிய உதவிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மாற்றுத் திறனாளிகள் அணியில் விளையாடும் வீர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவதுடன் இல்லாமல் வேலைகளுக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். இதில், உதாரணமாக நான் வேலைக்குச் சென்றால் மட்டுமே என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.  நான் பணியாற்றும் குடோன் உரிமையாளர் முகமது இஸ்மாயில் இரு வாரங்கள் கிரிக்கெட் விளையாடச் செல்வதற்காக விடுமுறை கேட்டாலும் கொடுத்து விடுகிறார். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காவும் விளையாடும் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை, ஊதியம்  உள்ளிட்ட சலுகைகளை வழங்கினால் எங்களால் நாட்டுக்காக மேலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சாகுல்ஹமீது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com