இந்தியாவின் முதல் முகமதிய பெண் ஆசிரியர் பாத்திமா ஷேக்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே நடத்திய பள்ளியில் தலித் குழந்தைகளுக்கு கற்பித்த இந்தியாவின் முதல் முஸ்லீம் ஆசிரியர்களில் பாத்திமா ஷேக் ஒருவர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபாய் புலே. ஆனால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று கேட்டால் பொதுவாக ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை. தெரியாததன் காரணம் அவர்களல்ல. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு பெண்ணின் பெயர் பொறிக்கப்படவில்லை. வரலாறு பொதுவாக அந்த காலத்தில் ஆண்களாலேயே எழுதப்பட்டது. அவர்கள் அடித்தட்டு பெண்களை பதிவிடவில்லை. சாவித்திரிபாய் புலே பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் முற்போக்கு கருத்துள்ளவர். சனாதன வாதிகளை எதிர்த்து கல்வி கொடுத்தவர். அதனாலும் கூட வரலாற்றில் எழுதப்படாமல் இருக்கலாம். 

பாத்திமா ஷேக்கை கொண்டாடிய கூகுள் டூடுல்

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர் பாத்திமா ஷேக். இவரும் இந்திய கல்வியாளர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்தான். ஆனால் பொதுவாக பாத்திமா ஷேக் பற்றியும் பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர் என பரவலாகக் கருதப்படும் இந்தியக் கல்வியாளர் மற்றும் பெண்ணியச் சின்னமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாள் ஜனவரி 9. இன்று, இவரை கொண்டாடும் விதமாக கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1831ஆம் ஆண்டு, ஜனவரி 9ஆம் தேதி பிறந்த பாத்திமா ஷேக், அவரது சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார்.

வரலாற்றில் தொலைந்து போன பாத்திமா 

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே நடத்திய பள்ளியில் தலித் குழந்தைகளுக்கு கற்பித்த இந்தியாவின் முதல் முஸ்லீம் ஆசிரியர்களில் பாத்திமா ஷேக் ஒருவர். இருப்பினும், அநீதிக்கு எதிராகப் போராடிய பல பெண்களைப் போலவே, இந்தக் கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியின் நினைவு இந்திய உணர்விலிருந்து துடைத்தெறியப்பட்டது இன்றுவரை.

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், வரலாற்றின் பக்கங்களில் அவர் தொலைந்து போனவர். ஆனால் இன்று உலக அளவில், டூடுல் மூலம் பெண்ணிய, கல்வியாளர் ஃபாத்திமா ஷேக்கை கூகுள் கெளரவிக்கிறது.

சாவித்திரி பாய் புலே மற்றும் ஜோதிராவ் புலேவுக்கு புகலிடம் தந்தவர் 

பாத்திமா  ஷேக், 1848 இல் சுதேசி நூலகத்தை சாவித்திரிபாய் புலேவுடன் இணைந்து நிறுவினார். இது பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளி. அவர் தனது சகோதரர் உஸ்மான் ஷேக்குடன் வசித்து வந்தார். அப்போது  தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் பள்ளிக்கூடம் அமைத்து கல்வி போதித்ததிற்காக ஜோதிபாய் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே இருவரையும் ஜோதிராவின் தந்தை கோவிந்தராவ், மகனையும் மருமகளையும் கல்வி சொல்லித்தருவதை நிறுத்தச் சொன்னார். இல்லை என்றால் சனாதன வாதிகள் அவர்கள் குடும்பத்தையை சமூக விலக்கலுக்கு உட்படுத்துவோம் என மிரட்டினார்கள்.

எனவே, கோவிந்த் ராவ் மகனையும், மருமகளையும் கல்வி சொல்லிக்கொடுப்பதை நிறுத்தச் சொன்னார்கள். இல்லை எனில் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற வற்புத்தினர். சாவித்திரி பாய் தொடர்ந்து பள்ளிக்குப் போய் வந்ததால், அவர்களது பெற்றோர், மேல் ஜாதி வர்க்கத்தினரின் மிரட்டுதலால் புலே தம்பதியரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர். தம்பதியினர் வெளியேற்றப்பட்ட பின்னர் , அவர்களுக்குப் போக புகலிடம் இல்லை. ஆனாலும் இருவரும் மனம் தளரவில்லை. 

புலே தம்பதியினர், 1841-1847க்கு இடையில் மாலி சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பின்னர், அப்போது அதனை அறிந்த உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் இருவரும், கஞ்ச் பேத்தில் உள்ள மோமின்புராவில் உள்ள வீட்டில் அவர்களுக்கு இடம் கொடுத்தனர். ஃபுலே தம்பதியினருக்கு உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் பாதுகாப்பும் கொடுத்தனர் 

சுதேசி நூலகமும், முதல் பெண்கள் பள்ளியும்

பாத்திமா ஷேக் முன்பே கல்வி கற்றவர்தான். சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றனர். எனவே 1848ல், ஜோதிபாய் புலே, உஸ்மான் ஷேக் இன்னும் வேறு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், ஷேக்குகளின் இல்லத்தில், அந்த கூரையின் கீழ் சுதேசி நூலகம் திறக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சாவித்திரிபாய் புலே மற்றும் ஜோதிபாய் புலே இருவரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளியை மீண்டும் துவக்கினர். இந்த பள்ளியில் மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி இதுதான்.   இந்த பள்ளியில் சாவித்திரிபாய் புலே முதல் பெண் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பாத்திமா ஷேக் முதல் பெண் முகமதிய ஆசிரியராக பணி புரியத்துவங்குகிறார். இந்தியாவில் முறையாகப் பயிற்சி பெற்று பணிபுரிந்த பெண் ஆசிரியர்கள் சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும்தான். 
  
இங்கு, சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் அவர்கள் பள்ளியில் , ஜாதி, மதம், மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படும் விளிம்புநிலை தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கற்பித்தார்கள். அவர் ஃபுலேவின் பிதேவாடா பள்ளியில் பெண்களுக்கு கற்பித்தல், வீடு வீடாகச் சென்று தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப குடும்பங்களை ஊக்குவித்து பள்ளிகளின் விவகாரங்களை நிர்வகித்தார். அவரது பங்களிப்பு இல்லாமல், முழு பெண்கள் பள்ளி திட்டமும் வடிவம் பெற்றிருக்காது. இன்னும், இந்திய வரலாறு பெரும்பாலும் பாத்திமா ஷேக்கை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. 

சத்யசோதக் சமாஜ் இயக்கம்  (உண்மை தேடுபவர்கள் சங்கம்) 

தாழ்த்தப்பட்ட சாதிகளில் பிறந்தவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக ஃபூலேஸின் முயற்சிகள் சத்யசோதக் சமாஜ் (உண்மை தேடுபவர்கள் சங்கம்) இயக்கம் என்று அறியப்பட்டது. சமத்துவத்திற்கான இந்த இயக்கத்தின் வாழ்நாள் சாம்பியனாக, பாத்திமா ஷேக் தனது சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பழங்குடி நூலகத்தில் கற்கவும், சாதி அமைப்பின் கடினத்தன்மையிலிருந்து தப்பிக்கவும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். சத்யசோதக் இயக்கத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்த முயன்ற ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்தார், ஆனால் ஷேக்கும் அவரது கூட்டாளிகளும் விடாமல் கல்வி போதிக்க புலே தம்பதிக்கும், பாத்திமாவுக்கும் உதவியைத் தொடர்ந்தனர். 

கூட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பாத்திமா ஷேக் 

சமூக விமர்சனங்கள் இருந்தபோதிலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு சான்றாக நிற்கிறது. கூகுளின் ப்ளாக் ஸ்பாட்டின் படி, ஷேக்கின் கதை 2014 வரை "வரலாற்றுப் புறக்கணிக்கப்பட்டதாக" இருந்தது, அப்போது இந்திய அரசாங்கம் உருது தேர்வுப் புத்தகங்களில் அவரது சாதனைகளை மற்ற இந்திய கல்வியாளர்களுடன் சேர்த்து உயர்த்தியது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்கு அவரது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர்களின் குரல்களைக் கேட்கும் வகையில் கூட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.
 
இந்திய அரசு அங்கீகாரம் 

பாத்திமா ஷேக்கின் கதை வரலாற்று ரீதியாக கவனிக்கப்படாமல் இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் 2014 இல் அவரது சாதனைகளில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.. பின்னர்  உருது பாடப்புத்தகங்களில் பாத்திமா ஷேக் பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.  கூகுள் ஞாயிற்றுக்கிழமை கல்வியாளர் மற்றும் பெண்ணியத்தின் அடையாளமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாளை உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட டூடுலுடன் கொண்டாடுகிறது. தனது துறையில் "வாழ்நாள் சாம்பியன்" என்று புகழப்படுகிறார். 

வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் கலவையில் அழகான கூகிள் டூடுல் பின்னணியில் இரண்டு திறந்த புத்தகங்களுடன் ஷேக்கின் விளக்கப்படத்தையும் சேர்க்கிறது. டூடுல் எளிமையானது, ஆனால் ஷேக்கின் வாழ்க்கையை ஒரே பார்வையில் காட்டுகிறது.

பாத்திமா பற்றிய குறிப்பு 

பாத்திமா ஷேக் கல்வித் துறையில் சாதி அடிப்படையிலான எதிர்ப்பை முறியடித்தார். பாத்திமா ஷேக் பற்றிய எந்தக் குறிப்பும் பெரும்பாலும் இல்லை.
பாத்திமா ஷேக் ஒரு வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார். 
பெண் கல்வியை இஸ்லாம் தடை செய்யவில்லை. 

எனவே, பூலேவால் தொடங்கப்பட்ட சாதி எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவள் இருப்பது அவளை மேலும் ஒரு புரட்சியாளராக நிரூபிக்கிறது. அவள் தன் சமூகத்திற்காக மட்டும் போராடவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் முஸ்லிம் மதகுருமார்களுக்கு பிடிக்கவில்லை.

தலித் இயக்கம் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த புலே, ஷாஹுஜி மகாராஜ், நாராயண குரு, பசவண்ணா போன்றவர்களை சிரமமின்றி ஏற்றுக்கொண்டது, ஆனால் பாத்திமா ஷேக் போன்றவர்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. முஸ்லிம் அறிஞர்கள் கூட பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை பெரிதும் புறக்கணித்தனர். ஒரு முஸ்லீம் பெண், சாதியற்ற சமுதாயத்திற்காகவும், பெண்களுக்கான நவீனக் கல்விக்காகவும் போராடுவது, மேலாதிக்க முஸ்லீம் கதைகளுடன் பொருந்தாது. பாத்திமா ஷேக் மற்றும் சாவித்ரிபாய் 1848 இல் பெண்களுக்கான பள்ளியை நிறுவினர். சர் சையத் அகமது கான் 1875 இல் முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார், அது பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது. இந்தியாவில் நவீன கல்வியின் முன்னோடிகளில் ஒருவராக கான் கருதப்படுகிறார். ஆனால் பாத்திமா ஷேக்கிற்கு சமமான முன்னோடிப் பணிகளைச் செய்த போதிலும் அதே அந்தஸ்து வழங்கப்படவில்லை 

சாவித்திரிபாய் கடிதம் & பாத்திமா 

சாவித்திரிபாய் தனது கணவருக்கு கடிதம் எழுதும் போது, பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை பற்றி எப்போதும்  குறிப்பிட்டு இருந்தார். அதன் மூலம் நாம் பாத்திமா பற்றி அறிகிறோம். இவற்றில் சிலவற்றை நாம் அறிவோம். பாத்திமா ஷேக்கின் சுருக்கமான விவரம் இப்போது மகாராஷ்டிராவின் உருது பள்ளி பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com