வதந்​தி​யைப் பரப்​பா​தீர்​கள்! | கரோனா தடுப்பூசிக்கு எதிராக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தும் தலையங்கம்


கொள்ளை நோய்த்​தொற்​றுப் பர​வ​லைக்​கூட தடுத்​து​வி​ட​லாம்; ஆனால் பேரி​டர் காலத்​தில் பரப்​பப்​ப​டும் வதந்​தி​க​ளைக் கட்டுப்​ப​டுத்​து​வ​து​தான் பெரும்​பாடு. கொள்ளை நோய்த்​தொற்​றுக்கு தடுப்​பூ​சி​யும்,  மருந்​தும் ஆராய்ச்​சி​கள் மூலம் கண்​டு​பி​டித்​து​விட முடி​யும். ஆனால் பரப்​பப்​ப​டும் வதந்​தி​க​ளைக் கட்டுப்​ப​டுத்து​வ​தும் காற்​றைக் கட்டுப்​ப​டுத்​து​வ​தும் ஒன்​று​தான். 

"15 நாள்​கள் தனி​மைப்​ப​டுத்​த​லுக்கு உள்ப​டுத்​தப்​பட்​டாலே போதும், கொள்ளை நோய்த்​தொற்​றுப் பர​வ​லின் வேகம் குறைந்​து​வி​டும்" என்று வேடிக்​கை​யாக கட்செவி அஞ்​ச​லில் வெளி​யி​டப்​பட்​டி​ருக்​கும் பதிவு ஒரு​வ​கை​யில் உண்​மை​யும்​கூட. தேவை​யில்​லாத அச்​சத்​தை​யும் பீதி​யை​யும் பரப்​பு​வ​து​டன், நோய்த்​தொற்​றைக் கட்டுப்​ப​டுத்த மேற்​கொள்​ளப்​ப​டும் நட​வ​டிக்​கை​கள் குறித்த தவ​றான விமர்​ச​னங்​க​ளை​யும் பரப்​பு​வது மிகப்​பெ​ரிய பாதிப்பை பர​வ​லா​கவே ஏற்​ப​டுத்​தி​யி​ருக்​கி​றது. இதற்​கொரு முடிவு ஏற்​ப​டா​விட்​டால் கொள்ளை நோய்த்​தொற்​றுக்கு பல அப்​பா​வி​கள் பலி​யாக நேரும்.

அமெ​ரிக்​கா​வைப்​போல மக்​கள்​தொகை குறைந்த, தொழில் நுட்ப ரீதி​யா​க​வும், நிர்​வா​கக் கட்ட​மைப்பு ரீதி​யா​க​வும் வளர்ச்​சி​ய​டைந்த ஜன​நா​ய​கம் அல்ல இந்​தியா. சீனா​வைப்​போல சர்​வா​தி​கார ஆட்சி​யும் நில​வ​வில்லை. அத​னால் வதந்தி பரப்​பு​ப​வ​ரைக் கண்​டிக்​கவோ தண்​டிக்​கவோ வழி​யில்லை. அதன் விளைவை நாம் எதிர்​கொள்​கி​றோம் என்​ப​து​தான் வேதனை. 

நடி​கர் ஒரு​வ​ரின் மர​ணத்​துக்​கும், கொவைட்-19 தடுப்​பூ​சிக்​கும் முடிச்​சுப் போட்டு, தேவை​யில்​லாத அச்​சத்தை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​தி​யி​ருப்​பது துர​தி​ருஷ்​ட​வ​ச​மா​னது. அந்த நடி​க​ரின் குடும்​பத்​தி​னரே மறுத்​தும்​கூட, அவ​ரது மர​ணத்தை பர​ப​ரப்​புச் செய்​தி​யா​கப் பரப்பி துன்​பி​யல் மகிழ்ச்​சி​ய​டை​யும் போக்கை என்​ன​வென்று சொல்ல?

நடி​கர் இறப்​ப​தற்கு முன், நாள்​தோ​றும் தமி​ழ​கத்​தில் சுமார் இரண்டு லட்சம் தடுப்​பூ​சி​கள் செலுத்​தப்​பட்டு வந்​தன. நடி​கர் இறந்த 17-ஆம் தேதி​யி​லி​ருந்து அடுத்த மூன்று நாள்​க​ளும் மொத்​த​மா​கச் சேர்த்து தமி​ழ​கத்​தில் செலுத்​தப்​பட்ட தடுப்​பூ​சி​க​ளின் எண்​ணிக்கை வெறும் 1.60 லட்சம்​தான். நடி​கர் இறந்த அன்று தமி​ழ​கத்​தில் தடுப்​பூசி செலுத்​திக்​கொண்​டோ​ரின் எண்​ணிக்கை வெறும் 25,678 மட்டுமே. 

மாநில அர​சும், மருத்​துவ நிபு​ணர்​க​ளும் தடுப்​பூ​சிக்​கும் நடி​க​ரின் மர​ணத்​துக்​கும் எந்​த​வி​த​மான தொடர்​பும் இல்​லை​யென்று எத்​த​னையோ விளக்​கங்​கள் அளித்​தா​லும்​கூட மக்​க​ளின் மன​தில் ஊட​கங்​கள் பதி​ய​மிட்​டி​ருந்த ஐயப்​பாடு, வேரூன்றி கிளை பரப்பி வளர்ந்​து​விட்​டது. அந்த விளக்​கங்​க​ளைப் பல​ரும் நம்ப மறுப்​பது அறி​யா​மை​யின் வெளிப்​பாடு.

தடுப்​பூ​சி​யின் தேவைக்​கும் உற்​பத்​திக்​கும் இடையே இருக்​கும் இடை​வெ​ளி​யால் ஏற்​பட்​டி​ருக்​கும் தட்டுப்​பாடு ஒரு​பு​றம் நில​வு​கி​றது. இன்​னொ​ரு​பு​றம், தடுப்​பூசி செலுத்​து​வ​தற்​காக ஒதுக்​கப்​பட்​டி​ருக்​கும் தடுப்​பூசி மருந்​து​கள் போதிய அள​வில் பய​னா​ளி​கள் இல்​லா​த​தால் காலா​வ​தி​யாகி வீணா​கின்​றன. 
ஒவ்​வொரு கோவி​ஷீல்ட் குப்​பி​யி​லும் 10 தடுப்​பூ​சி​க​ளுக்​கான மருந்​தும், ஒவ்​வொரு கோவேக்​ஸின் குப்​பி​யி​லும் 20 தடுப்​பூ​சி​க​ளுக்​கான மருந்​தும் காணப்​ப​டு​கின்​றன. குப்​பி​யைத் திறந்​தால், நான்கு மணி நேரத்​தில் முழு​மை​யா​கப் பயன்​ப​டுத்​தி​யாக வேண்​டும். இல்​லை​யென்​றால் தூக்​கி​யெ​றிய வேண்​டி​ய​து​தான். அதே​போல, தடுப்​பூசி மருந்​துக்கு காலா​வ​திக் கெடு உண்டு. மத்​திய அர​சால் அனுப்​பப்​ப​டும் தடுப்​பூ​சி​களை முழு​மை​யாக காலா​வ​தியாகும் கெடுக்​குள் பயன்​ப​டுத்​தா​மல் போனால், எந்த முகத்​து​டன் நாம் கூடு​தல் தடுப்​பூசி கோர முடி​யும்?
 
தேசிய அள​வில் ஒப்​பி​டும்​போது தமிழ்​நாட்​டில் தடுப்​பூசி மருந்​து​கள் வீணா​கும் விகி​தம் குறை​வு​தான் என்​கிற அள​வில் மகிழ்ச்சி அடை​ய​லாம். தேசிய அள​வி​லான வீணா​கும் தடுப்​பூசி சரா​சரி 6.5% என்​றால், தமி​ழ​கத்​தில் 3.7% தான். தெலங்​கானா (17.6%), ஆந்​தி​ரம் (11.6%) மாநி​லங்​க​ளைப்​போல நாம் மோச​மாக இல்லை என்​பது ஆறு​தல். 

தடுப்​பூசி போட்டுக்​கொண்​டா​லும் கொவைட்-19 கொள்ளை நோய்த்​தொற்​றால் நோயா​ளி​கள் பாதிக்​கப்​ப​டு​கி​றார்​கள் என்​கிற தவ​றான பிர​சா​ரம் பரப்​பப்​ப​டு​கி​றது. எந்​த​வொரு மருந்​துக்​கும் சில விதி​வி​லக்​கு​கள் இருக்​கத்​தான் செய்​யும் என்​பது அனு​ப​வ​பூர்வ உண்மை. 

இந்​திய மருத்​துவ ஆராய்ச்​சிக் கழ​கத்​தின் ஆய்​வ​றிக்​கை​யின்​படி, கோவி​ஷீல்​டின் முதல் தவணை தடுப்​பூசி போட்டுக்​கொண்ட 10.03 கோடி பேரில் 17,145 பேரைத்​தான் நோய்த்​தொற்று பாதித்​தி​ருக்​கி​றது. அதே​போல இரண்​டா​வது தடுப்​பூசி போட்டுக்​கொண்ட 1.57 கோடி பேரில் 5,014 பேர் மட்டுமே பாதிக்​கப்​பட்​டி​ருக்​கி​றார்​கள். முத​லா​வது முறை கோவேக்​ஸின் போட்டுக்​கொண்ட 93.56 லட்சம் பேரில் 4,208 பேரும், இரண்​டா​வ​து​முறை தடுப்​பூசி போட்டுக்​கொண்ட 13.37 லட்சம் பேரில் வெறும் 698 பேர் மட்டுமே கொள்ளை நோய்த்​தொற்​றால் பாதிக்​கப்​பட்​டி​ருக்​கி​றார்​கள். தடுப்​பூசி போட்டுக்​கொள்​வ​தால் நோய்த்​தொற்று பாதிப்பு கட்டுக்​குள் வராது என்​பது தவ​றான பிர​சா​ரம்.
 
பெரும்​பா​லான மக்​கள்​தொ​கை​யி​ன​ருக்கு தடுப்​பூசி போடப்​பட்​டி​ருக்​கும் நாடு​க​ளில் கொள்ளை நோய்த்​தொற்​றுக்​காக மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​ப​டு​வ​தும் உயி​ரி​ழப்​பு​க​ளும் மிக​வும் குறை​வா​கவே காணப்​ப​டு​கி​றது. அத​னால் நோய்த்​தொற்​றுப் பர​வ​லைத் தடுப்​ப​தற்கு தடுப்​பூ​சி​தான் ஒரே வழி.
ஆய்வு முடி​வு​க​ளின்​படி, தடுப்​பூசி போட்டுக்​கொண்​ட​வர்​க​ளில் 0.02 - 0.04% பேர்​கள் மட்டும்​தான் கொவைட்-19 கொள்ளை நோய்த்​தொற்​றுக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்​கள். நோய்த்​தொற்​றி​லி​ருந்து பாது​காக்​கப்​பட்ட 99.96% பேரை ஒதுக்​கி​விட்டு விதி​வி​லக்​கு​களை விளம்​ப​ரப்​ப​டுத்தி பீதி​யைக் கிளப்​பு​வது ஒரு​வ​கை​யில் தேசத் துரோ​கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com