சுடச்சுட

    

    அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்

    By விருதுநகர்  |   Published on : 22nd November 2012 10:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.

    இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும்.

    அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai