சுடச்சுட

  

  இக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம்

  By dn  |   Published on : 06th August 2013 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ignounewdelhi

  புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியியல் துறையில், ஆசிரியர்களுக்கென இரண்டு வருட தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

  இந்த பட்டயப் படிப்பு திறந்த மற்றும் தொலைநிலை கல்வி முறையில் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. தொடக்க கல்வி முறையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இப்படிப்புக்கு சனிக்கிழமையன்று, தேசிய தலைநகர் பல்கலைக்கழக தலைமையகத்தில் இக்னோ மற்றும் அருணாசல பிரதேச அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அருணாசல பிரதேசத்தில் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் இக்னோ பல்கலைக்கழகம் NCTE அங்கீகாரத்துடன் இரண்டு வருட தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

  இப்படிப்பை குறித்த முழு விரிவரங்கள் அறிய www.ignou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai