Enable Javscript for better performance
மீன்வள பல்கலையின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மீன்வள பல்கலையின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் நியமனம்

    By dn  |   Published on : 09th March 2013 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

    சென்னையில் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் இயக்குநராக (தொழில்நுட்பம்) பொறுப்பில் உள்ளார், பாஸ்கரன் மணிமாறன். அவர் மூன்று ஆண்டுகள் அல்லது எழுபது வயதை எட்டும் வரையில் துணைவேந்தர் பொறுப்பில் இருப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai