
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (செப். 12) விடுமுறை விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும், வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டுத் தேர்வு, கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
"கனமழை தொடரும்' என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (செப். 11) விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.