சுடச்சுட

  

  மத்திய பொதுப் பணியாளக்ர தேர்வாணையம், பணியாளர் தேர்வானையம் மற்றும் மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வுகளை முடித்திருக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.

  குடும்ப மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

  நிதியுதவி விகிதமானது கெஜட் பதவிக்கும் மாதம் ரூ.50,000/- மற்றும் கெஜடட் சாராத பதவிக்கு மாதம் ரூ.25,000 /- என இருக்கும்.

  திட்டத்தின் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தின் மாதிரி இந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.minorityaffairs.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரையறுக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக நிரப்பி விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து, துணைச் செயலாளர் அறை எண்: 1130, சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகம், பார்யவரன் பவன், 11வது தளம், சிஜிஓ வளாகம், லோடி சாலை, புது டெல்லி - 110003 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  மேலும் இவ்விண்ணப்பம் செப்., 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai