செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை படைத்தனர்.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் அண்மையில் கேம்பெஸ்ட்-14 என்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 39 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட், வாலிபால், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். இதில் கிரிக்கெட் போட்டியில் முதலிடமும், வாலிபால் போட்டியில் 2-ஆம் இடமும் பிடித்தனர். நீளம் தாண்டுதலில் மாணவர் சிவராமன் 2-ஆம் இடமும், தொடர் ஓட்டத்தில் சங்கரா பல்கலை மாணவர்கள் 2-ஆம் இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் விஷ்ணுபோத்தி, பதிவாளர் சீனிவாசு, முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், டீன் ஸ்ரீராம், உடற்கல்வி இயக்குநர் குணாளன், ராஜசேகரன், வினோத் ஆகியோர் பாரட்டினர்.