சுடச்சுட

  
  read_student_b

  பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது. தேர்வுக்கு கிளம்பும் பெரும்பாலான மாணவர்கள் பதறி அடித்து ஓடுவார்கள். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  சரியாக தேர்வு ஆரம்பிக்கும் போது தேர்வு அறைக்குள் நுழைவார்கள். இதனால் தேவையில்லாமல் பதட்டம் ஏற்படுவதோடு, தேர்வு சரியாக எழுத முடியாமல் போகிறது.

  தேர்வுக்கு கிளம்பும் மாணவர்கள் எந்தவிதச் கவனச் சிதறலும் இன்றி மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், புத்தகம், ஹால்டிக்கெட் அனைத்தையும் தேர்வுக்கு முன்னதாகவே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியாக தேர்வுக்கு செல்லும் போது அதை காணும், இதை காணும் என்று தேடி தேவையில்லாமல் டென்ஷன் ஆவதை தவிர்க்கலாம்.

  தேர்வுக்கு புதிதாக எதுவும் படிக்கமால், படித்தவற்றை ஒருமுறை திருப்பி பார்த்து விட்டு, அமைதியான மனதுடன் தேர்வு அறைக்குள் செல்லலாம்.

  மாணவர்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றால் பதட்டம் இல்லாமல் இருக்கும்.

  மேலும், கடைசி நிமிடம் வரை படித்துக் கொண்டே இருக்காமல், தேர்வுக்கு முன் 10 நிமிடமாவது அமைதியாக இருக்கலாம்.  இவ்வாறு மாணவர்கள் கடைப்பிடித்தால் தேர்வு நன்றாக எழுதுவதுடன் வெற்றி நிச்சயம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai