கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்கள்: இம்மாத இறுதியில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும்
Updated on
1 min read

கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும் என திகாரிகள் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 19 முதல் 21 -ஆம் வரை நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு 320, பால்வளம், உணவு பதப்படுத்தல், கோழியின உற்பத்தி ஆகிய தொழில்நுட்பப் படிப்புகளுக்கு தலா 20 என மொத்தம் 360 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அனைத்து இடங்களும் நிரம்பின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு, எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வுக்கு பின்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 
55 இடங்கள்: இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவர்களில் 55 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. எனவே, அந்த இடங்கள் காலியிடங்களாகக் கருதப்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும்.
கூடுதல் இடங்கள்: இதனிடையே, கூடுதல் இடங்கள் கோரி அனுப்பப்பட்ட திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கால்நடை மருத்துவப் படிப்புக்கு சென்னை, நெல்லை, ஒரத்தநாடு ஆகிய கல்லூரிகளில் தலா 20 என மொத்தம் 60 இடங்களுக்கும், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: 
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 4 -ஆவது வாரத்தில் நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கூடுதலாக அனுமதி கிடைத்துள்ள 100 இடங்களுக்கும் சேர்த்து அப்போது கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com