Enable Javscript for better performance
கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 02nd December 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகளை கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெற்று வரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து, உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களை ஆன் -லைனில் பதிவு செய்ய வரும் 15 -ஆம் தேதி (டிச.15) கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெறலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai