சுடச்சுட

  

  சிபிஎஸ்இ தேர்வுக்கு புத்தகம் எடுத்து செல்லும் நடைமுறை கைவிடப்படுகிறது

  By DIN  |   Published on : 04th February 2017 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cbse

  புது தில்லி: வரும் கல்வியாண்டிலிருந்து 9, 11-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்லும் நடைமுறையைக் கைவிட சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக, அந்த வாரியத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறியதாவது:
  2017-18 கல்வியாண்டு முதல் 9, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறந்த நிலைத் தேர்வு முறை ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தேர்வு முறையால், மாணவர்களின் பகுத்தறியும் திறன்கள் பாதிக்கப்படுகிறது என பல்வேறு பள்ளிகள் கருத்து தெரிவித்திருந்தன.
  எனவே, 9, 11-ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத் திட்டத்திலிருந்து திறந்த நிலைத் தேர்வு முறை திரும்பப் பெறப்படுகிறது என்றார் அந்த அதிகாரி.
  சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளின்போது பாடப் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுக்க மார்ச் 2014 முதல் அனுமதி வழங்கப்பட்டது.
  11-ஆம் வகுப்பைப் பொருத்தவரை, பொருளாதாரம், உயிரியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வில் மட்டும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai