சுடச்சுட

  

  சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் "வேலம்மாள் மகாஉத்சவ்' என்ற பெயரில் 222 மாணவர்கள் பங்கேற்ற தொடர் இசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமைதொடங்கியது.
  இந்த விழாவில், மாணவர்கள் இசையமைத்து உருவாக்கிய "பள்ளி பருவம்' என்ற குறுந்தகட்டை இசையமைப்பாளர் கங்கை அமரன் வெளியிட, பள்ளி முதல்வர் ஹேமலதா பெற்றுக்கொண்டார்.
  இதில் கங்கை அமரன் பேசியதாவது: எங்கள் அம்மா பாடிய தாலாட்டு பாடலான "அன்னக்கிளி உன்ன தேடுதே' பாடலே முதன்முதலாக திரைப்படத்துக்கு நாங்கள் பதிவு செய்த பாடல். நம் நாட்டில் தற்போது பல போராட்டங்கள் நடைபெறுகின்றன.
  நாம் மொழி கடந்து இந்தியர் என்ற உணர்வோடு வாழவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உள்ள அபரிமிதமான திறமைகளை வளர்த்தெடுத்து வாழ்வில் அவர்கள் வெற்றி பெற ஊக்கமளிக்க வேண்டும் என்றார். முன்னதாக பள்ளி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai