சுடச்சுட

    

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்றுவது கட்டாயம்: யுஜிசி

    By DIN  |   Published on : 09th February 2017 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்றியாக வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
    தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவற்றின் பாடத்திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.
    கலை -அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரை பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அவை இணைப்பு பெற்றிருக்கும் அந்தந்த பகுதி கலை -அறிவியல் பல்கலைகழகங்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கலை -அறிவியல் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை இந்த நடைமுறை வழக்கமாக பின்பற்றப்படுவதில்லை என பேராசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    இந்த நிலையில், பிரதமரின் தலைமையில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற உயர்கல்வித் துறை செயலர்கள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
    அதனடிப்படையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், பல்கலைக்கழக துறைகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான பாடத் திட்டம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai