Enable Javscript for better performance
எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுக்கு இன்று இலவச கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுக்கு இன்று இலவச கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 11th February 2017 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்எஸ்சி -சிஜிஎல் (மத்திய அரசு பணிகள்) தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், சென்னை செம்பாக்கம் (வேளச்சேரி -தாம்பரம் பிரதான சாலை) "டர்னிங் பாய்ன்ட்' கல்வி மையத்தின் சார்பில் இலவச கருத்தரங்கம் சனிக்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது.
    இதுகுறித்து அந்த கல்வி மையத்தின் இயக்குநர் மதன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    எஸ்எஸ்சி -சிஜிஎல் (பட்டப்படிப்பு தகுதி) 30,000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது.
    இந்தத் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம், செம்பாக்கம் "டர்னிங் பாயின்ட்' கல்வி மையத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
    இதில் பங்கேற்க விரும்புவோர் 96771 66270, 044-4260 5823 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai