சுடச்சுட

  

  சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி: ஆன்-லைன் சேர்க்கை அறிமுகம்

  By DIN  |   Published on : 11th February 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்க்கை பெற, ஆன்-லைன் சேர்க்கை முறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
  இதன் மூலம், தொலைநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வி மையங்களுக்கோ மாணவர்கள் நேரில் செல்லத் தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின்படி, மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். சேர்க்கை உறுதியானவுடன், பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களுக்கான அடையாள அட்டை, புத்தகங்கள் ஆகியவை தபால் மூலம் அவர்களுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai