சுடச்சுட

  

  பொறியியல் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்

  By DIN  |   Published on : 11th February 2017 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி: பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நாடு தழுவிய நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டயமாக்கப்படுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 2018-19 ஆம் கல்வி ஆண்டில் இதை அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பொறியியல் இளநிலை படிப்புகளில் ஒரே நுழைவுத் தேர்வை ஏற்படுத்த அண்மையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  அடுத்தக்கட்டமாக தொழில்நுட்ப கல்வி மையங்களையும் இதுபோன்ற நாடுதழுவிய நுழைவுத் தேர்வின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai