சுடச்சுட

  

  சர்வதேச தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்த வாய்ப்பு: விஐடி உதவி துணைத் தலைவர்

  By DIN  |   Published on : 14th February 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vit

  சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்னை ஆஸ்திரேலிய வர்த்தகக் கழக ஆணையர் டாக்டர் கிரேசன் பெர்ரி. (இடமிருந்து 4-ஆவது) வி.ஐ.டி. பல்கலைக்கழக உதவி துணைத்

  வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஒருங்கிணைந்து படிக்கும்போது, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப அறிவாற்றலை இரு தரப்பினரும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்று சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன் கூறினார்.
  வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறுகிய கால கணினி புள்ளி விவர சேமிப்புத் தொழில்நுட்பப் படிப்புத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
  சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 50 -க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 15 நாள்கள் இங்கு பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கணினி தொடர்பான சர்வதேச தரமிக்க தொழில்நுட்பக் கல்வியுடன், கலாசாரம், மொழி, பொருளாதாரம், சந்தை வாய்ப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai