சுடச்சுட

    

    அமெரிக்க ஃபெலோஷிப் திட்டங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 15th February 2017 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்கா -இந்தியா கல்வி அறக்கட்டளையின் (யுஎஸ்ஐஇஎஃப்) சார்பில், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெறும் வகையிலான ஃபெலோஷிப் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
    வரும் 2018 -2019 -ஆம் ஆண்டுக்கான இந்தத் திட்டத்தில் இணைய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு அறக்கட்டளையின் மூலம் நிதியுதவு வழங்கப்படும்.
    இதன்படி, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கவுள்ள இந்திய மாணவர்கள், இந்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர உள்ளோர், இந்தியாவில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல் -தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், அரசு -தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளர்கள், நிர்வாகிகள் என 6 பிரிவுகளில் ஃபெலோஷிப் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
    நான்கு மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த ஃபெலோஷிப் திட்டங்களில் பங்கேற்க விரும்புவோர், இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து அறக்கட்டளையின்  www.usief.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai