சுடச்சுட

  

  'பெருமை தேடித் தருவதில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு'

  By DIN  |   Published on : 15th February 2017 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SRM

  விழாவில் சிங்கப்பூர் நான்யாங் பல்கலை. தலைவர் பெர்ட்டில் ஆண்டர்சநுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து.

  பல்கலைக்கழகங்களுக்குச் சர்வதேசப் பெருமையையும், மரியாதையையும் பெற்றுத் தருவதில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சிங்கப்பூர் நனியாங் பல்கலைக்கழகத் தலைவர் பெர்ட்டில் ஆண்டர்சன் கூறினார்.
  சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் மேலும் பேசியது:-
  மாணவர்களின் அறிவாற்றலையும், தொழில்நுட்ப ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக் கொள்ள உறுதுணையாக பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன.
  தர வரிசைப் பட்டியலில் தாங்கள் பெற்ற இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கும் மாணவர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கிய காரணமாகும்.
  தற்போது சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வரிசையில் ஆசியப் பல்கலைக்கழகங்களும் இடம் பெறத் தொடங்கி விட்டன. சிங்கப்பூரில் உள்ள இரு பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  இந்தியப் பல்கலைக்கழகங்களும் சர்வதேசத் தர வரிசைப்பட்டியலில் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த பெருமையைப் பெற்றுத் தருவதில் உங்களுக்கும் பங்குண்டு என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai