சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு: பிப்ரவரி 20 முதல் 28 வரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வு

    By DIN  |   Published on : 18th February 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பிப்ரவரி 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
    இதற்கு விண்ணப்பித்த நேரடித் தனித் தேர்வர்கள், ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி தேர்வு பெறாதவர்கள், மேற்குறிப்பிட்ட நாள்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
    இந்தத் தேர்வு குறித்து அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு கிடைக்காத தனித் தேர்வர்கள், இதையே தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    இது குறித்து செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai