சுடச்சுட

  

  'போட்டி, சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்'

  By DIN  |   Published on : 18th February 2017 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srm

  ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார் டான்போஸ் இண்டஸ்டிரிஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் பி.ஜெகதீஷ்

  மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை மட்டுமல்லாமல் போட்டி,சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று "டான்போஸ் இண்டஸ்டீரிஸ் இந்தியா' நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் பி.ஜெகதீஷ் கூறினார்.
  ராமாபுரம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது
  இங்கு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பயன்படும் வகையில் பல்வேறு கணினி மென்பொருள்களை உருவாக்கி அளித்து இருப்பதும், கைபேசிகளுக்கான புதிதாக மென்பொருள்கள் கண்டுபிடிப்புப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று இருப்பதும் பாராட்டத்தக்கது.
  வளமான எதிர்காலம் கருதி பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களுக்கு வழிகாட்டதான் முடியும். நீங்கள் தான் உங்களது அறிவாற்றல், திறமையால் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
  இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் தொழில், வணிகம், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் போட்டி, சவால்களை எதிர்கொண்டுதான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் புரிந்து கொண்டு மாணவர்களும் போட்டி, சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய சிந்தனையுடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு சர்வதேச அளவிலான சந்தையில் வரவேற்பு உள்ளது என்றார் அவர்.
  கருத்தரங்கில் கணினி, கைபேசி மென்பொருள் கண்டுபிடிப்புப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai