சுடச்சுட

  

  மார்ச் 2-ல் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: 707 பேருக்கு பட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 20th February 2017 12:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pondy

  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா வரும் மார்ச் 2-ம் தேதி ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் என முதல்வர் ப.பூங்காவனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் (2013-பட்டம் முடித்தவர்கள்) இளங்கலை, முதுகலை, எம்.பில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மொத்தம் 707 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முதல்வர் நாராயணசாமி பட்டமளிப்பு உரையாற்றி பட்டங்களை வழங்குகிறார். கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

  கல்லூரி நேரம் மாற்றம்
  கல்லூரியின் நேரம் முன்பு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இருந்தது. தற்போது மாணவியர் நலன் கருதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை என நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  செல்லிடப்பேசி பயன்படுத்த தடை
  மேலும் கல்லூரி வகுப்பறைகளில் பேராசிரியர்களோ, மாணவியரோ செல்லிடப்பேசியை பயன்படுத்த என தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தீவிரமாக அமுல்படுத்தப்படும்.

  23 சிறப்பு விரிவுரையாளர்கள்
  தற்போது 111 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 104 பேர் பேராசிரியர்கள் ஆவர். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களில் சிறப்பு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றன. மொத்தம் 23 பேர் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  நீண்ட நாள்களாக காலியாக இருந்த உடற்கல்வி இயக்குநர் பதவிக்கும் சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

  வளாக வேலைவாய்ப்பு முகாம்
  நடப்பாண்டு முதல் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குறைந்தது 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

  கலைப்பாடப்பிரிவுகளில் குறைந்த அளவு இடங்கள் உள்ளதால் ஏராளமான மாணவியருக்கு பயில வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. இதற்காக கல்லூரியில் ஷிப்ட் முறை கொண்டு வருவது குறித்து அரசு தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். 

  மேலும் பாரதிதாசன் கல்லூரியில் வகுப்பறைகள் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லாத நிலை உள்ளது என்றார் பூங்காவனம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai