சுடச்சுட

  

  தேசிய அளவில் 20 ஆராய்ச்சியாளர்கள்: கால்நடை பல்கலை.க்கு முதலிடம்

  By DIN  |   Published on : 21st February 2017 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவில் 20 இளநிலை ஆராய்ச்சியாளர்களைப் பெற்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் நாட்டில் உள்ள 73 வேளாண்மை பல்கலைக்கழகங்கள், 64 இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களும், 15 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், 663 வேளாண் அறிவியல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
  இந்த அமைப்பானது வேளாண்மை, கால்நடை அறிவியல் சார்ந்த முதுநிலை- ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. தேர்ச்சி பெறுவோர் கல்வித் உதவித் தொகையுடன் ஆராய்ச்சி திட்ட நிதியுதவியுடன் மேற்படிப்பை தங்களுக்கு விருப்பமான பல்கலைக்கழகங்களில் தொடர முடியும். இந்த வகையில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம், மீன்வளப் பாடப் பிரிவில் படித்த 20 மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் கல்விக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai