சுடச்சுட

  

  இந்திய மாணவர்களுக்கு விசா உச்ச வரம்பு இல்லை: பிரிட்டன்

  By DIN  |   Published on : 22nd February 2017 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nirmala

  தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பெண்களின் அதிகார மேம்பாடு குறித்த ஐ.நா. அறிக்கையை வெளியிட்ட மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  இந்தியாவிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கான நுழைவு இசைவு (விசா) எண்ணிக்கையில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "பெண்களின் பொருளாதார அதிகார மேம்பாடு' குறித்த ஐ.நா. அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் ஆஸ்கித் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
  இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டிலிருந்தும் மாணவர்கள் வருவதற்கான விசா எண்ணிக்கையில் பிரிட்டன் உச்ச வரம்பு நிர்ணயிக்கவில்லை.
  யார் வேண்டுமானாலும் பிரிட்டன் வந்து, அங்கு ஏற்கெனவே உள்ள சுமார் 50 லட்சம் சர்வதேச மாணவர்களுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறலாம்.
  இதற்காக, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் பிரிட்டனில் நிறைந்துள்ளன.
  மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டன் பங்கு கொண்டு வருகிறது.
  பிரிட்டன் நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சராசரியாக 7 சதவீதத்தை இந்தியாவிலுள்ள பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக செலவிட்டு வருவதுடன், பெண்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்றார் அவர்.
  கல்வி பயில்வதற்காக பிரிட்டன் செல்லும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் அண்மையில் தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியது.
  அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது.
  விசா கட்டுப்பாடுகளைக் குறைக்குமாறு இந்தியா கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai