சுடச்சுட

  

  யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு: தமிழகத்திலிருந்து 210 பேர் தகுதி

  By DIN  |   Published on : 22nd February 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்படும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வின் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 210 பேர் தேர்வாகியுள்ளனர்.
  முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் என மூன்று நிலைகளில் இந்தத் தேர்வு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.
  இதில் 2016 ஆகஸ்ட் 7-இல் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 6.5 லட்சம் பேர் எழுதினர். இதில், 15,900 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த முதன்மைத் தேர்வானது 2016 டிசம்பர் 3 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 2,961 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மார்ச் 20-இல் தில்லியில் இறுதி சுற்றான நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
  நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி: மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 112 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  இதேபோல், மனித நேயம் பயிற்சி மையம் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி, சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai