சுடச்சுட

  

  தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விடைத்தாள் நகலை நாளைமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

  By DIN  |   Published on : 28th February 2017 03:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்களின் நகல் கோரி பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பித்தோர், அவற்றை scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  மறுகூட்டலுக்கு எப்போது? இதைத் தொடர்ந்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 6 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை தொடர்புடைய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
  விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும்.
  தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.
  இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai