சுடச்சுட

  

  வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம்: முன்னாள் நீதிபதி பி.எம். அக்பர் அலி

  By DIN  |   Published on : 28th February 2017 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூர்: இளைஞர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தினால், வாழ்க்கையில் முன்னேறலாம் என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி கூறினார்.
   ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில், 200 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, அவர் மேலும் பேசியதாவது:
   எதிர்காலம் என்ற வாய்ப்பு இளைஞர்கள் கையில் உள்ளது. வாய்ப்புகள் உங்களை தேடி வராது. இளைஞர்கள் தான் அவற்றை தேடிச் செல்ல வேண்டும். வேலை வாய்ப்பு இல்லையென நாம் கூறி வருகிறோம். ஆனால், நாளிதழ்களை பார்த்தால் நிறைய வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக விளம்பரங்கள் வெளியாகின்றன.
   அத்தகைய வாய்ப்புகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். விரல் நுனியில் அறிவை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  
   இளைஞர்கள் தங்களுடைய இலக்கை நோக்கி வேகமாகச் செல்ல வேண்டும். நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது இளைஞர்களின் கடமையாகும். நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai