பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேடு கூடாது: கல்வித் துறை அறிவுறுத்தல்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேட்டுக்கு இடமின்றி வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தினார்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேட்டுக்கு இடமின்றி வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி, 31ஆம் தேதி நிறைவடைகிறது. இதில், தியரி என்ற கருத்தியல் தேர்வுடன், அறிவியல் சார்ந்த செய்முறைத் தேர்வும் நடத்தப்படும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், மனை அறிவியல், இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளி ஆய்வகங்களில் தொடங்குகிறது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி பிறப்பித்த உத்தரவு:
செய்முறைத் தேர்வின்போது, வேறு பள்ளி கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். செய்முறை உபகரணங்களை மாணவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான ரெக்கார்ட் புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று மதிப்பெண் வழங்க வேண்டும். முறைகேட்டுக்கு இடமின்றி வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும்.
தேர்வில் எந்த மாணவருக்கும் முறைகேடாக கூடுதலாகவோ, குறைத்தோ மதிப்பெண் வழங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com