அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பில்., பி.எச்டி. படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பில். (முழுநேரம்), பி.எச்டி. (முழுநேரம்/பகுதி நேரம்) ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பில். (முழுநேரம்), பி.எச்டி. (முழுநேரம்/பகுதி நேரம்) ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி, 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 20-ஆம் தேதியாகும்.
எம்.பில். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ. ஆயிரம். பி.எச்டி. படிப்புகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 1,500. 
கூடுதல் விவரங்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளமான www.annamalaiuniversity.ac.in -இல் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகளை இணைத்து, விரைவு அஞ்சலிலோ, பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிடையாகவோ "The Registrar, Annamalai University, Annamalai Nagar - 608 002'' என்ற முகவரியில் சேர்க்க வேண்டும். 
வங்கி வரைவோலை (Demand Draft) THE REGISTRAR, ANNAMALAI UNIVERSITY என்ற பெயரில் 9.7.2018-க்கு பிறகு பெறப்பட்டு, சென்னையில் மாற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு auadmission2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 04144 - 238349 என்ற உதவி மையத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
படிப்புகள் விவரம்...
கலைப்புலம்: (எம்.பில், பி.எச்டி.) ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், எக்கானிமிக்ஸ், சமூகவியல், பொருளாதாரம், சோஷியல் வொர்க், காமர்ஸ், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ரூரல் டெவலப்மெண்ட், ரூபல் ஸ்டெடிஸ், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் 
சயன்ஸ், பிலாஸபி. பி.எச்டி. - சட்டம்.
அறிவியல் புலம்: (எம்.பில், பி.எச்டி) கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், பிளாண்ட் பயாலஜி மற்றும் பிளாண்ட் பயோ டெக்னாலஜி, விலங்கியல், என்வயர்மெண்டல் பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மைக்ரோ பயாலஜி, ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி. 
கடல் அறிவியல்: மரைன் பயோ டெக்னாலஜி, மரைன் மைக்ரோ பயாலஜி, மரைன் புட் டெக்னாலஜி, மரைன் பயாலஜி மற்றும் ஓசோனோகிராபி, கோஸ்டல் அக்குவாகல்சர், ஓஷன் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி.
இந்திய மொழியியல்: தமிழ், லிங்கிஸ்டிக்ஸ். 
பொறியியல் புலம்: கெமிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் அண்ட் பயோ டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, புட் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் அண்ட் இன்ஸ்டரியல் úஸப்டி, சிவில், சிவில் அண்ட் ஸ்ட்ரெக்சரல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எல்க்டிரிகல்அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் அண்ட் இன்ஸ்டுருமெண்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், மேனுபேக்சரிங் பார்மஸி. 
கல்விப் புலம்: கல்வி, சைக்காலஜி. பிசிகல் எஜூகேஷன், யோகா. 
இசைப் புலம்: இசை.
வேளாண் புலம்: (பி.எச்டி.) அக்ரானமி, என்டோமாலஜி பிளாண்ட் பேத்தாலஜி, மைக்ரோ பயாலஜி, சாயில் சயின்ஸ் அண்ட் அக்ரிகல்சரல் கெமிஸ்டரி, அக்ரிகல்சரல் பாட்டனி, ஜெனிடிக்ஸ் அண்ட் பிளாண்ட், பிரீடிங், சீட் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, தோட்டக் கலை, அக்ரிகல்சரல் எக்கானிமிக்ஸ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்சரல் எஸ்டென்ஷன், அனிமல் ஹஸ்பண்டரி. 
மருத்துவப் புலம்: (பி.எச்டி.) பிசியாலஜி, பயோ கெமிஸ்டரி, பார்மோகாலஜி, பேத்தாலஜி, மைக்ரோ பயாலஜி, கம்யூனிட்டி மெடிசின், ஜெனரல் மெடிசின், பீடியாட்டிரிக்ஸ், ஜெனரல் சர்ஜரி, இஎன்டி, ஆப்தோமாவஜி, கார்டியாலஜி, நர்சிங். 
பல் மருத்துவம்: (பி.எச்டி.) Oral and Maxillofacial Pathology and Oral Microbiology, Oral & Maxillofacial Surgery, Periodontology, Pediatric and Preventive Dentistry, Orthodontics and Dentofacial Orthopaedics, Prosthodontics and Crown & Bridge, Conservative Dentistry & Endodontics, Oral Medicine and Radiology.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com