GATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா?... இதனை கொஞ்சம் கவனித்து விண்ணப்பிக்கலாம்...

இந்திய தொழில்நுட்ப கழகத்தால் கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு
GATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா?... இதனை கொஞ்சம் கவனித்து விண்ணப்பிக்கலாம்...

இந்திய தொழில்நுட்ப கழகத்தால் கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.  கேட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட உயர்ந்த கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வு தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்திய அறிவியல் கழகத்தில் சிவில் துறையில் மேற்படிப்புகளை படிக்கவும், இந்திய மேலாண்மை கழகத்தில் எம்.பி.ஏ படிக்கவும் இந்த தேர்வு மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான GATE 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பயன் என்ன?: ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்த தேர்வு, பொறியியல் மற்றும் அறிவியல் முடித்திருப்பவர் தங்களது பாட அறிவை பரிசோதித்துக் கொள்ளவும் அதன் மூலமாக மேற்படிப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றில் பணி வாய்ப்பை பெறவும் இந்தத்தேர்வை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்தியன் ஆயில் நிறுவனம், ஓ.என்.ஜி.சி., கெய்ல், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் தங்களது அதிகாரி நிலை பணியாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள கேட் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களுடன் நேர்முகத் தேர்வில் பெற்றிடும் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிவாய்ப்பு தரப்படுகிறது. 

இந்தியாவில் 37க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு தான் பணியாளர்களை வடிகட்டி பணிக்கு எடுத்துக் கொள்கின்றன. மேலும் கேட் தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற ஆய்வு நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பிலும் சேர முடியும். 

உதவித்தொகை: கேட் தேர்வு மூலமாக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்பே பெறுவோருக்கு பெலோஷிப் எனப்படும் உதவித் தொகையும் தரப்படுகிறது. இந்தத் தேர்வை நாட்டின் புகழ் பெற்ற ஐ.ஐ.டி., நிறுவனங்கள் தான் நடத்துகின்றன. இந்தத் தேர்வை ஐ.ஐ.எஸ்சி., மற்றும் 7 ஐ.ஐ.டி க்கள் இணைந்து நடத்தவுள்ளன 

இந்த ஆண்டுக்கான தேர்வை தில்லி ஐ.ஐ.டி நடத்தவுள்ளது. 

மொத்தம் 25 பாடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் பாடமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை உங்களது பட்டப்படிப்பு பாடத்தில் இருந்து எழுதலாம்.
 
தேர்வு: ஒரே நாளில் 2 வேளைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முழுக்க கணினி வழித் தேர்வாக இது நடத்தப்படுகிறது. 

GATE 2020 பதிவுமுறை: GATE 2020 பதிவுமுறை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் கவனமாக செயல்பட்டு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 
GATE 2020 தகுதி: GATE 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் GATE தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது தடையில்லை.

GATE 2020 தேர்வு முறை: தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும். அதாவது சி.பி.டி. (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்) என அழைக்கப்படுகிறது. GATE 2020 தேர்வுகள் 2020 பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியே கிரெடிட், டெபிட் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். மாணவர்களின் பிரிவுக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கும் 

தேர்வு நடைபெறும் காலம்: ஆன்லைனில் 3 மணி நேர தேர்வாக நடத்தப்படும். கணிதம், பொறியியல் மற்றும் பொது திறனறி பாடங்களில் கேள்விகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 65 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒரு தடவை இந்தத் தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தோராயமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வை 10 லட்சம் பேர் எழுதுகின்றனர் 

GATE 2020 அனுமதி சீட்டு பெறுவது எப்படி?: தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கான அனுமதி சீட்டை (Admit card) 2020 ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதி சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ரகசிய சொல்லை பதிவிட்டு தங்களின் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு முடிந்த சில நாட்களில் விடைகள் (Answer Key) அதிகாரிகளால் வெளியிடப்படும்.

GATE 2020 முடிவுகள் மற்றும் கவுன்சிலிங்: GATE 2020 தேர்வு முடிவுகள் ஆன்லைனிலேயே வெளியிடப்படும். அதிகாரிகள் தேர்வு முடிவுகளை மார்ச் 16, 2020 அன்று வெளியிடுவர். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மார்ச் 20 முதல் மே 31, 2020 வரை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: விண்ணப்பங்களை செப்டம்பர் 24 ஆம் தேதி வரை பூர்த்தி செய்ய முடியும்.

GATE 2020 தேர்வு பாடத்தை மாற்றி விண்ணப்பிக்கக் கடைசி தேதி: அக்டோபர் 3 முதல் 4வது வாரம் வரை 

தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள கடைசி தேதி: நவம்பர் 15

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். பொதுப்படையான கவுன்சிலிங் முறை எதுவும் நடத்தப்படாது. கவுன்சிலிங் 2020 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கும்.

முழு விபரங்களை அறிய gate.iitd.ac.in இணைய தளத்தை பார்த்துக் கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com