5, 8-ஆம் வகுப்புகளுக்கு 2 மணி நேர பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்...!

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டு 2 மணி நேர பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
5, 8-ஆம் வகுப்புகளுக்கு 2 மணி நேர பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்...!


தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டு 2 மணி நேர பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டு பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.  இந்த வகுப்புகளுக்கு மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும்  தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. 
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 60 மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு  100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை. 
தேர்வு மையங்கள்:  இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்:  அனைத்து மாவட்டங்களிலும் 5,  8  ஆகிய வகுப்பு பொதுத் தேர்வுக்கு 20 மாணவர்களுக்கு  ஒரு தேர்வு மையம் அமைக்கப்படவேண்டும். அதற்கு குறைவாக உள்ள 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மிக அருகில்  உள்ள தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அதேபோல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் அருகில்  உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும்.அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டார அளவில் பெற்று , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து  தேர்வு மையங்களினை தேர்வு செய்யப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு... மாணவர்களுக்கு  தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், தேர்வு நேரம் 2 மணி என்ற அளவிலும் நடைபெறும். வினாக்கள் 3ஆம் பருவத்திற்கான பாடத் திட்டத்திலிருந்தும், முதல் மற்றும் 2ஆம் பருவத்திற்கான பாடத்திட்டத்திலிருந்து பொதுவான வினாக்களும் கேட்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் ரூ. 50,  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் என  கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com