முதுநிலை மருத்துவப் படிப்புகள்: இதுவரை 3,450 விண்ணப்பங்கள்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதுவரை இணையம் மூலம் 3,450 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும்


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதுவரை இணையம் மூலம் 3,450 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தொடங்கியது. வரும் 20-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆவணங்களுடன் வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் (டிஎம்இ) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இதுவரை 3,450 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com