முதுநிலை ஹோமியோபதி கலந்தாய்வு:5 இடங்கள் மட்டுமே நிரம்பின

முதுநிலை ஹோமியோபதி படிப்புகளில் காலியாக இருந்த இடங்களுக்காக நடத்தப்பட்ட உடனடி கலந்தாய்வில் வெறும் 5 இடங்கள் மட்டுமே நிரம்பின.

முதுநிலை ஹோமியோபதி படிப்புகளில் காலியாக இருந்த இடங்களுக்காக நடத்தப்பட்ட உடனடி கலந்தாய்வில் வெறும் 5 இடங்கள் மட்டுமே நிரம்பின.

அதிலும், நான்கு இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காலியாக உள்ள இடங்களை மறு கலந்தாய்வு மூலம் நிரப்ப முடியுமா? அல்லது அவற்றை கைவிடுவதா? என்பது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும், ஒயிட் மெமோரியல் கல்லூரியும் உள்ளன. அங்கு, ஹோமியோபதி பட்ட மேற்படிப்புக்கு 55 இடங்கள் உள்ளன. அவற்றில், மாநில அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதில் முதுநிலை ஹோமியோபதி படிப்புக்கான நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் ஏறத்தாழ அனைவரும் பங்கேற்றனா். இருந்தபோதிலும் மிகச் சில இடங்களே நிரம்பின. இதையடுத்து காலியாக உள்ள இடங்களுக்கான உடனடி கலந்தாய்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்க விரும்புவோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. இருப்பினும், கலந்தாய்வில் எவரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. அன்றைய தினத்தில் வெறும் 5 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இந்திய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை யோகா, சித்தா, ஆயுா்வேதப் படிப்புகளுக்கு மட்டுமே வரவேற்பு உள்ளதாகத் தெரிகிறது. யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் சேர மாணவா் ஆா்வம் காட்டாததே இடங்கள் நிரம்பாததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

யுனானி, ஹோமியோபதி இளநிலை படிப்புகளில் 400-க்கும் இடங்கள் நிரம்பாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com