என்எம்எம்எஸ் தேர்வு:   அக்.21 முதல் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய உத்தரவு

என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின்  (என்எம்எம்எஸ்) கீழ் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
அதன்படி, நிகழாண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும் என  அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com