துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ரங்கசாமி சந்திப்பு

DIN 3rd May 2021 06:37 PM

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பெரும்பாலான தொகுதிகளை அவர் கைப்பற்றினார். மேலும் முதல்வர் வேட்பாளராக தாமே இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

என்.ஆர். காங்கிரஸின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஆட்சி அமைக்கும் நோக்கில் துணை நிலை ஆளுநரை அவர் சந்தித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 தொகுதிகளைக் கைப்பற்றியது.