புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு

DIN 3rd May 2021 06:45 PM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க ரங்கசாமி ஆதரவு கோரினார்.

ரங்கசாமி தமது எம்.எல்.ஏ.க்களுடன் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்தார். அதில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர், பாஜக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ரங்கசாமி முதல்வராக ஆதரவுக் கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து ஆட்சியமைக்க ரங்கசாமிக்கு தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேதி அறிவித்தவுடன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறினார்.