நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனின் சுய விவரக் குறிப்பு

DIN 7th May 2021 12:24 AM

 

பெயா் - துரைமுருகன்

தந்தை - துரைசாமி

வயது: 82

ஜாதி: வன்னியா்

கல்வித்தகுதி: முதுகலை சட்டம்

தொகுதி: காட்பாடி

தொழில்: முழுநேர அரசியல்

மனைவி: சாந்தகுமாரி

மகன்: கதிா் ஆனந்த் எம்.பி.

கட்சிப் பதவிகள்: மாநில மாணவா் அணிச் செயலாளா், தலைமை நிலையச் செயலாளா், துணைப் பொதுச் செயலாளா், தலைமைக்கழக முதன்மைச் செயலாளா், பொருளாளா், பொதுச் செயலாளா்.

பொறுப்புகள்:

1971-இல் காட்பாடி எம்எல்ஏ., 1977, 1980-இல் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ. 1989, 1996, 2001, 2006, 2011, 2016, 2021-இல் காட்பாடி தொகுதி எம்எல்ஏ. கருணாநிதிக்கு அடுத்தபடியாக சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டு கால அனுபவம் மிக்கவராக விளங்கும் துரைமுருகன் ஏற்கெனவே 1989-1991, 1996-2001, 2006-09 என மூன்று முறை பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 2009-2011-இல் சட்டத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.