மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம்

DIN 14th August 2021 11:41 AM

மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநலை அறிக்கை இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 

அப்போது பேசிய அவர், ''நடப்பு நிதி ஆண்டில் 1700 நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ரூ.5 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்துக்காக ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 1 லட்சம் வரை 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ. 5 கோடி செலவிடப்படும். 

மானியத்தில மின்மோட்டார் பம்பு செட்டுககள் திட்டம் சார்பாக விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மேலும், 50 உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.