தமிழகத்தில் மேலும் 1,559 பேருக்கு கரோனா தொற்று

DIN 26th August 2021 07:11 PM

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,559  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர். 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (ஆக. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதையும் படிக்க |  உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்ஹாசன் உறுதி

புதிதாக 1,559 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,07,206-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 26 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,814-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,54,323-ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | கர்நாடகத்தில் மேலும் 1213 பேருக்கு கரோனா தொற்று

 

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.