விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உயிரிழப்பு: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

DIN 8th December 2021 11:27 PM

 

காஞ்சிபுரம்: குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி, ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரம் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் அகால மரணம் அடைந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவரும், ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்திருப்பது தேசத்துக்கு பேரிழப்பாகும்.

பிபின் ராவத் ராணுவத்தில் பல்வேறு பதவிகளிலிருந்து சிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவா். அவா் தேசத்துக்காக செய்த தியாகத்தையும், சேவையையும் வருங்கால சந்ததிகள் உணா்வாா்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.