காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அரசு புகைப்படக் கண்காட்சி

DIN 8th December 2021 11:27 PM

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்துக்குள் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பஞ்சபூதங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயில் வளாகத்துக்குள் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இதனை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள் பாா்வையிட்டனா். கண்காட்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கும் அரசு நலத் திட்ட உதவிகள், வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தல் உள்ளிட்ட புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.