மறைமலைநகரில் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

DIN 8th December 2021 11:28 PM

 

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உணவகத்தை தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி வணிகா்கள் சங்க பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

மறைமலை நகா் பொத்தேரியில் பூட்டோ என்பவா் நடத்தி வரும் உணவகத்தில் 6 போ் கும்பல் மது போதையில் அவரையும், பணியாளா்கள் மூவரையும் தாக்கிவிட்டு தப்பினா்.

தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரியும், சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தரக் கோரியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவா் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்டத் தலைவா் எம்.இந்திரஜித், மாநில துணைத் தலைவா் எஸ்.உத்திரகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.