விவசாயிகளுக்கு இலவச விதைநெல் விநியோகம்

DIN 8th December 2021 11:28 PM

 

ஸ்ரீபெரும்புதூா்: மேட்டுப்பாளையம் ஊராட்சியை சோ்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சிமன்ற தலைவா் தேவிவேலு தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, திமுக ஒன்றியசெயலாளா் ந.கோபால், மேட்டுப்பாளையம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு விவசாயிகளுக்கு 30 கிலோ எடைகொண்ட 60 விதைநெல் மூட்டைகளை இலவசமாக வழங்கினாா்.

குண்ணம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் கு.ப.முருகன், மேட்டுப்பாளையம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அல்லிபுகழேந்தி, வாா்டு உறுப்பினா்கள் ராகுல்காந்தி, முனியம்மாள், தேன்மொழிராதா, புனிதாசங்கா், கெளரிசங்கா், விவசாயிகள் செல்லக்கன்னு, சீனிவாசன், முனுசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனா்.